நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பை நீதிமன்றம் பிடி வாரண்ட்

நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கல்போத்தி அகோரம் தயாரிப்பில், பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' என்ற ஒரு திரைப்படத்தில், கதாநாயகனாக ஆர்யா நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் சிங்கம்பட்டி சமஸ்தானம் மற்றும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகியவை குறித்து அவதூறாக காட்சிகள் உள்ளதாக கூறி, 2013ல் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கில், 2 வாரங்களுக்கு முன்பு, ஆர்யா, பாலா, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அவர்களின் மேலாளர் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கு இம்மாதம் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைக்கப்பட்டதோடு, அன்று, ஆர்யா, பாலா, தயாரிப்பாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அன்றைய தேதியில் மூவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். எனினும், நேற்றும் மூவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி முரளிதரன், ஜூலை 13ம் தேதி மூவரும் ஆஜராக வேண்டுமென்று பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.


Ninaivil

திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018