தம்பிராமைய்யாவின் ‘மணியார் குடும்பம்’... உமாபதியுடன் குத்தாட்டம் போட்ட ‘பிக்பாஸ்’ யாஷிகா!

மணியார் குடும்பம் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்.

நடிகர் தம்பி ராமைய்யா தன் மகன் உமாபதியை நாயகனாக்கி, தானே கதை, திரைக்கதை எழுதி நடித்து, இசையமைத்து, இயக்கியுள்ள படம் மணியார் குடும்பம்.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இப்படத்தில் உமாபதிக்கு ஜோடியாக மிருதுளா முரளி மற்றும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

யாஷிகா ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

காதல், ஆக்‌ஷன், காமெடி என முழுநீள என்டர்டெய்னராக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் தம்பி ராமையா. உமாபதியும் நடனம், காதல் காட்சிகள், சண்டை என தன் பங்கிற்கு சிறப்பாகவே செய்திருப்பது டிரெய்லரிலேயே தெரிகிறது.

தமிழில் முரளி நடித்த 'மனுநீதி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தம்பி ராமையா, வடிவேலுவை வைத்து 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தையும் இயக்கியுள்ளார். பிறகு தொடர்ந்து படங்கள் இயக்காமல் குணச்சித்திரம், காமெடி என நடிப்பில் கவனம் செலுத்திய அவர், 'மைனா' படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

தற்போது மீண்டும் தன் மகன் உமாபதிக்காக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது நினைவு கூரத்தக்கது.


Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018