பழைய ராமதாசாக இருந்திருந்தால் சர்கார் திரைப்படத்தை ஓட முடியாதபடி செய்திருப்பேன்!

நான் பழைய ராமதாசாக இருந்திருந்தால் சர்கார் திரைப்படத்தை எந்த திரையரங்கிலும் ஓட முடியாதபடி தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், நேற்று பா.ம.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சர்கார் திரைப்படத்தின் விளம்பரத்தில், நடிகர் விஜய் புகை பிடிப்பது மாதிரியான படத்தை பார்த்ததும் தனக்கு கடுமையான கோபம் வந்ததாக தெரிவித்தார். 

நடிகர் விஜயும், சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கோடி கோடியாக பணம் வாங்கிக் கொண்டே, புகைக்கும் காட்சியை சர்கார் படத்தில் வைத்திருப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டினார். 

மேலும் நான் பழைய ராமதாசாக இருந்திருந்தால் சர்கார் திரைப்படத்தை எந்த திரையரங்கிலும் ஓட முடியாதபடி தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன் என்றும், ஆனால் தற்போது சர்கார் படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெறக்கூடாது என்று விஜய் மற்றும் சன் பிக்சர்சுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டார். மேலும் நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளுடன் இனி எந்த படத்தையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018