வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் நடத்திய முப்பெரும் விழா....

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவியரசு கண்ணதாசன் 92 -ஆவது பிறந்த நாள் விழா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் 91-ஆவது பிறந்தநாள் விழா, அசாம் மாநிலத்தில் தமிழ்க் கவிதை வாசித்த கவிஞர் மு.முருகேஷ்- க்கு பாராட்டு விழா ஆகிய  முப்பெரும் விழா, வந்தவாசி தேரடியிலுள்ள  எஸ்.ஆர்.எம்.கணினி மைய வளாகத்தில் நடைபெற்றது. 

     இந்த விழாவிற்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமை தாங்கினார். வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெ. சுப்ரமணியன், தமிழ்ச் சங்க துணைத் தலைவர் சு. அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க செயலாளர் பா. சீனிவாசன் வரவேற்றார்.

        கவியரசு கண்ணதாசன் எழுதி, இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தபாடல்களை பெ.பார்த்திபன்,  இரா. அருண்குமார் ஆகியோர் இசையுடன் பாடினர்.  கவிஞர்கள் வந்தை குமரன், ம.சுரேஷ் பாபு, இரா.பாஸ்கரன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.

      சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, திருவண்ணாமலை  மேனாள் மாவட்ட கல்வி அலுவர் வீ.மதி அழகன், ’கவியரசு பாடலும் எம்.எஸ்.வி இசையும்...’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மத்திய அரசின் சாகித்திய அகாதெமி அழைப்பின் பேரில் அசாம் மாநிலம் கவிகாத்தி சென்று, இலக்கிய விழாவில் கவிதை வாசித்து வந்த வந்தவாசி கவிஞர் மு.முருகேஷுக்கு பாராட்டு செய்யப்பட்டது.

      தலைநகர் சென்னையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் திருவுருவச் சிலையை அமைக்க  தமிழக அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற தீர்மானமானமும் நிறைவேற்றப்பட்டது.         நிறைவாக, பொருளாளர் எ.தேவா நன்றி கூறினார்.

படக்குறிப்பு:

        வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், மத்திய அரசின் சாகித்திய அகாதெமி அழைப்பின் பேரில் அசாம் மாநிலம் சென்று கவிதை வாசித்த கவிஞர் மு.முருகேஷுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் பாராட்டு செய்த போது எடுத்த படம். அருகில், மேனாள் மாவட்டக் கல்வி அலுவலர் வீ. மதி அழகன், தலைமையாசிரியர் சுப்ரமணியன் ஆகியோர் உள்ளனர்.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018