டிரம்பின் அகதிகள் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு - அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை கைது செய்து தடுப்பு மையங்களில் அடைக்கும்போது, அவர்களது குழந்தைகள் பிரிக்கப்பட்டு, தனியாக சிறப்பு மையங்களுக்கு அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி சுமார் 2000 குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர்.

டிரம்ப் அரசின் இந்த மனிதாபிமானமற்ற அகதிகள் கொள்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்திய வம்சாவளி எம்.பி. பிரமிளா ஜெயபால் உள்பட வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் அரசின் அகதிகள் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்றன. வெள்ளை மாளிகை அருகே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான போராட்டங்கள் ஜனநாயக கட்சி தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தலைமையில் நடைபெற்றது. வாஷிங்டனில் நடந்த பிரதான பேரணியில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 

டிரம்பின் அகதிகள் கொள்கை மனிதாபிமானமற்றது என்றும், சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்தவர்களிடம் இருந்து எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை பிரிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

Ninaivil

திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019