அஜித் நடிக்கும் ’விஸ்வாசம்’ திரைப்படம்- பொங்கல் ரிலீஸ்

’தல’ அஜித் மற்றும் ’சிறுத்தை’ சிவா கூட்டணியில் உருவாகி வரும் ’விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ’விஸ்வாசம்’. ஆங்கிலத்தின் 'V' வரிசையில்,அஜித்-சிவா கூட்டணியில் வெளிவரும் 4வது படம் ’விஸ்வாசம்’. 

அஜித் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து அஜித்-நயன்தாரா நடிக்கும் நான்காவது படமாக உருவாகி வருகிறது ’விஸ்வாசம்’. 

அல்டிமேட் ஸ்டார் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால், விஸ்வாசத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் தமிழ் திரையுலகில் ஏற்பட்டுள்ளது. 

அஜித், நயன்தாரா உடன் விவேக், ’ரோபா’ சங்கர், தம்பி ராமையா, யோகி பாபு, ரமேஷ் திலக், மதுமிதா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது. 

நகைச்சுவை கலந்த காதல், அதிரடி படமாக தயாராகி வரும் விஸ்வாசம் படத்தில், நயன்தாரா மருத்துவராக நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் அவரது தோற்றம் குறித்து புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

விவேகம்’ படத்தை தயாரித்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே ‘விஸ்வாசம்’ படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ் நேரடியாகவும், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் ஒரேநாளில் ‘விஸ்வாசம்’ வெளிவருகிறது. 

அஜித் ரசிகர்களை தாண்டி, தமிழக திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம். 2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018