திருப்பதி ஏழுமலையான் கோவில் விவகாரம் குறித்து அடுத்த வாரம் மனு தாக்கல் - சுப்பிரமணியன் சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தலைமை குருக்கள் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ரமண தீட்சிதர், திருப்பதி கோவிலில் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், ராஜ பரம்பரையினர் சுவாமிக்கு வழங்கிய 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணவில்லை. சி.பி.ஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ஆகம விதிகளை திருப்பதி தேவஸ்தானம் மீறுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, திருப்பதி தேவஸ்தான விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப் போவதாக பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்ய உள்ளேன் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் யமுனாவை சுத்தப்படுத்தும் திட்டம் ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் தயாராக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் பொதுநல மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018