சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஒப்பந்தமான முன்னணி நடிகை

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தில் த்ரிஷா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில், மற்றொரு முன்னணி நடிகை ஒருவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். #SaamySquare #Vikram

 

ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானசாமிபடத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.

 

எனவே இந்த பாகத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்தது படக்குழு. தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் படக்குழுவில் இருந்து த்ரிஷா வெளியேறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து த்ரிஷாவுடன் படக்குழு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது

 

இந்த நிலையில், த்ரிஷா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் விக்ரம் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும், விரைவில் ஒரு பாடலுடன் படப்பிடிப்பு நிறைவு பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது

 

 

 

இந்த படத்தில் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் கதாபாத்திரத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார். பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

 

படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

Ninaivil

திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019