கூடங்குளம் அணு உலையை மூட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!

தமிழகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் கூடங்குளம் அணு உலையை உடனே மூட தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை மக்களுக்கு பேராபத்து விளைவிக்கக் கூடியது என்பதற்கான சான்றுகளுடன் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பாக பொறியாளர் சுந்தர்ராஜன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2012-ல் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். பாதுகாப்பற்ற அணு உலை மூடப்பட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார். 

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணு உலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சில நிபந்தனைகளை விதித்து அந்த வழக்கை முடித்து வைத்தது. அந்த நிபந்தனைகளில் ஒன்று கூடங்குளம் அணு உலையின் கழிவுகளைப் பாதுகாப்பாக கையாளுவதற்கான வசதிகளை 2018-ம் ஆண்டிற்குள் அணுசக்தி நிறுவனம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. 

ஆனால் 2018-ல் இந்திய அணுசக்தி நிறுவனம் அணுக் கழிவுகளைக் கையாள்வதற்கான தொழில்நுட்பம் தங்களிடம் இல்லை என்று வெளிப்படையாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது. இந்தச் சூழலில் இப்பிரச்சினை குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பொறியாளர் சுந்தர்ராஜன் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.அணு உலை கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் தங்களிடம் இல்லை என்று இந்திய அணுசக்தி நிறுவனம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் கூடங்குளம் அணு உலையை உடனே இழுத்து மூடவேண்டும் என்று சுந்தர்ராஜன் கோரியிருந்தார். 

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், அணு உலையை மூட உத்தரவிட முடியாது என்றும், அணு உலைக் கழிவுகளை சேகரிக்கத் தேவையான வசதிகளை மேற்கொள்ள அளித்திருந்த அவகாசத்தை 2022 வரை நீட்டித்துள்ளது. கூடங்குளம் அணு உலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு கவலையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. 

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்த ஜப்பான் போன்ற நாடுகளே அணு உலையாலும் அதன் கழிவுகளாலும் பாதிக்கப்பட்டு தற்போது அணு உலைகளே வேண்டாம் என முடிவெடுத்திருக்கும் போது நமது இந்திய நாட்டில் மட்டும் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய அணு உலையைத் தொடர்ந்து அனுமதிப்பது வேதனைக்குரியது. 

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு அணு உலைகளும் செயல்படத் தொடங்கியது முதல் தொடர்ந்து பழுதுகள் ஏற்பட்டுவரும் நிலையிலும், அதன் கழிவுகளைப் பாதுகாப்பாகக் கையாளும் தொழில்நுட்பம் இந்திய அணுசக்திக் கழகத்திடம் இல்லை என்பதை உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள சூழலிலும், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த அணு உலை தொடர்வது என்பது ஆபத்தானது. கதிர்வீச்சு ஆபத்து கொண்ட அணு உலையில் சிறிய விபத்து ஏற்பட்டால் கூட மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். 

எனவே, தமிழகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் இந்த அணு உலையை உடனே மூட தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்''. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar