உலக கோப்பை கால்பந்து தொடருக்கான கால்இறுதி ஆட்டம் 6-ந்தேதி தொடக்கம்உலககோப்பை கால்பந்து திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

கடந்த 28-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் போட்டியை நடத்தும் ரஷியா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ், டென்மார்க், குரோஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, சுவீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் ஜெர்மனி, எகிப்து, சவுதி அரேபியா, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் தொடக்க சுற்றிலேயே வெளியேறின.

2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று முடிவடைந்தன. இதன் முடிவில் பிரான்ஸ், உருகுவே, ரஷியா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல், டென்மார்க், மெக்சிகோ, ஜப்பான், சுவிட்சர்லாந்து, கொலம்பியா ஆகிய அணிகள் 2-வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். கால்இறுதி ஆட்டங்கள் 6-ந்தேதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் பிரான்ஸ்- உருகுவே, பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

7-ந்தேதி நடைபெறும் கால்இறுதிகளில் இங்கிலாந்து-சுவீடன், ரஷியா, குரோஷியா அணிகள் மோதுகின்றன.

அரையிறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ந்தேதியும், இறுதிப்போட்டி 15-ந் தேதியும் நடக்கிறது.

Ninaivil

திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019