ஆண்டிகுவா டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 201/2

வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

வங்காள தேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம்  இக்பால், லியான் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். வெஸ்ட் இன்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக, கீமர் ரோச் சிறப்பாக பந்து வீசி வங்காள தேசத்தின் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார்.

தொடக்க ஆட்டக்காரரான லியான் தாஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே வெளியேறினர். இதனால் வங்காள தேச அணி தனது முதல் இன்னிங்சில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.வெஸ்ட் இன்டீஸ் அணியின் கீமர் ரோச் 8 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடியதால் அணியின் எண்ணிக்கை 100 ரன்களை கடந்தது.

113 ரன்களாக இருக்கும்போது டேவன் ஸ்மித் 58 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து ஆடிய பாவெல் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 194 ஆக இருந்தது.

தொடர்ந்து இறங்கிய  தேவேந்திர பிஷு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இதனால் வெஸ் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 68 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வைட் 88 ரன்களுடனும், பிஷு ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018