வீடியோ வெளியானது, தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் நலமாய் உள்ளனர்: சிறுவர்களை மீட்க 3 வழிகள் பரிசீலனை

தாய்லாந்து நாட்டில் தாம் லுவாங் என்கிற குகைக்கு தங்களது கால்பந்து பயிற்சியாளருடன் உல்லாச பயணம் சென்ற 12 சிறுவர்கள், அங்கு மழை, வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். 9 நாள் தேடலுக்கு பின்னர் அவர்கள் உயிருடன் இருப்பதை 2-ந் தேதி இரவு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த குகை மீட்பு வீரர்கள் கண்டுபிடித்தனர்.

அவர்களை பத்திரமாக மீட்பதற்கு மாதக்கணக்கில் ஆகலாம் என கூறப்பட்டாலும், அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. குகைக்குள் உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் குகையில் சிக்கி உள்ள சிறுவர்களைப் படம் பிடித்து, தாய்லாந்து கடற்படை வெளியிட்டு உள்ளது. அதில் 11 சிறுவர்கள் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் அந்த நாட்டுமுறைப்படி கேமரா முன்பாக வணக்கம் சொல்லி, தாங்கள் நலமுடன் இருப்பதை தெரிவிக்கும் காட்சி வீடியோவில் இடம் பெற்று உள்ளது. அவர்கள் தற்போது மகிழ்ச்சியாகவும், உஷாராகவும் இருப்பது வீடியோ மூலம் அம்பலத்துக்கு வந்து உள்ளது.

குகைக்கு வெளியே டெலிவிஷனில் அந்த வீடியோ காட்டப்பட்டபோது, குகையில் சிக்கி உள்ள ஒரு சிறுவனின் தாயார், ஆனந்தக்கண்ணீர் சிந்தினார். டி.வி. திரையில் தன் மகனைப் பார்த்தபோது அந்தத் தாயார், அவனது உருவத்தை தன் விரலால் வருடியது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. தன் மகன் இப்போது மெலிந்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தற்போது அந்த சிறுவர்களுக்கு நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் பராமரிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

அவர்களை குகைக்குள் இருந்து முக்குளிப்பு முறையில் மீட்பது, குகையை துளையிட்டு அதில் இருந்து தண்ணீரை வெளியேற்றி மீட்பது உள்ளிட்ட 3 வழிகள் பரிசீலிக்கப்படுகின்றன.

Ninaivil

திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019