பெரிய வர்த்தகர்கள் பயன்பெறுவதற்காக சிறு வியாபாரிகள் முதுகெலும்பை முறித்து விட்டார் பிரதமர் மோடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பெரிய வர்த்தகர்கள் பயன்பெறுவதற்காக சிறுவியாபாரிகளின் முதுகெலும்பை பிரதமர் மோடி முறித்து விட்டதாக ராகுல் காந்தி  குற்றம்சாட்டியுள்ளார். உத்தர பிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்ற தொகுதியான அமேதிக்கு 2 நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வருகை தந்தார். 

புர்சத்கஞ்சில் கட்சி நிர்வாகிகள் இடையே அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது: 15 பெரிய வர்த்தகர்களின் ரூ.2 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் பிரதமர் மோடி சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் முதுகெலும்பை  முறித்துவிட்டார்.

சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் உங்கள் பணத்தை திருடி விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோருக்கு வழங்கியுள்ளார். அமேதி தொகுதியில் 250 இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்படும் வகையில் ஜவகர்லால் நேரு நிறுவனத்தில்  பயிற்சி அளிக்கப்படும்.  இவ்வாறு ராகுல் பேசினார்.

 இதையடுத்து அரசு மையத்தில் தனது விளைபொருளை விற்க காத்திருந்தபோது உயிரிழந்த விவசாயி ஒருவரின் வீடு உள்ள பியூர் திங்காய் கிராமத்திற்கு  சென்று ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார்.

மாய ரயில் திட்டம் கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: டோக்லாம் எல்லையில் பிரச்னை வெடித்தபோது பிரதமர் மோடி சீன  அதிபருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறார்.

மோடியின் வெளியுறவுக் கொள்கை என்ன? புல்லட் ரயில் திட்டம் ஒரு மாய திட்டமே. அதை உண்மையில்  செயல்படுத்துவது சாத்தியமில்லை. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது உண்ைமயில் அனைத்து தரப்பு வியாபாரிகளையும் புரட்டி போட்டு  விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018