ரொகிங்யாக்களின் அகதி முகாம்களில் மர்ம படுகொலைகள்

மியன்மாரிலிருந்து இடம்பெயர்ந்த ரொகிங்யா அகதிகள் பங்களாதேசில் தங்கியுள்ள முகாம்களில் இடம்பெறும் மர்மக்கொலைகள் காரணமாக அகதிகள் அச்சமடைந்துள்ளனர்.


கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 20 பேர்வரை அகதிமுகாம்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் சிலர்  சமூகதலைவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.நள்ளிரவில் கத்தி துப்பாக்கி போன்றவற்றை பயன்படுத்தி இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்த கொலைகளில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து அகதிகளிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக பங்களாதேஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகாமில் உள்ள அகதிகளிற்கான தலைவராக நியமிக்கப்பட்ட 35 வயது அரிபுல்லா என்பவர் கடந்த மாதம் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத நபர்கள் அவரை சுற்றிவளைத்து 25 தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட நபர் ஆங்கிலத்தில்உரையாற்றக்கூடியவர் சர்வதேச மனிதநேய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியவர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இந்த கொலை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கொல்லப்பட்டவரின் மனைவி தனது கணவர் ரொகிங்யாக்களின் முக்கிய கிளர்ச்சிக்குழுவை விமர்சித்து வந்தவர் என தெரிவித்துள்ளார்.

எனினும் கிளர்ச்சிக்குழுவினர் தாங்கள் இவ்வாறான கொலைகளில் ஈடுபடவில்லை தங்களிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் இதனை செய்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018