நாளிதழ்களில் இன்று: தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி கூடாது: தமிழக அரசு

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி கூடாது: தமிழக அரசு


மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் வழியாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டண கொள்ளையை தடுக்கவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகார ஒழுங்குமுறை சட்டம் 1973ல், பிரிவு 3ன்படி, அங்கீகாரம் அளித்த படிப்பை தவிர, வேறு பாடங்களை பயிற்றுவிப்பது விதிமீறல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் திட்டம் சாத்தியமில்லை - ராகுல் காந்தி


மத்திய அரசின் புல்லட் ரயில் திட்டம் சாத்தியமாவதற்கு வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புல்லட் ரயிலை மாயாஜால ரயில் என்றே அழைக்க வேண்டும். ஏனெனில், அந்த ரயில் திட்டம் சாத்தியமாக வாய்ப்பில்லை. ஒருவேளை, இந்த ரயில் திட்டம் சாத்தியமானால் அது காங்கிரஸ் ஆட்சியில்தான் நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் கையில் துப்பாக்கி வைத்துக் கொள்ள உத்தரவு


காவல்துறையினர் மீது தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தகுதியில் இருக்கும் போலீஸார் தற்காப்புக்காக கையில் துப்பாக்கி எடுத்து செல்ல, மதுரை மாநகர ஆணையர் டேவிட்வசன் தேவாசிர்வாதம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும்போது ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளால் எதிர்பாராமல் தாக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018