8 வருடங்களின் பின் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணி அறிவிப்பு

வெளிநாட்டு கால்பதாட்ட அணி ஒன்றின் விளையாட்டுத்திறனைக் காணும் வாய்ப்பு எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை இரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது.

பங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டிக்கு முன்னோடியாக லிதுவேனிய அணியுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது.

லிதுவேனியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான   கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணியில் சிரேஷ்ட அனுபவம்வாய்ந்த ஏழு வீரர்களே இடம்பெறுகின்றனர்.

முன்னாள் தலைவர்களான சுஜான் பெரேரா, மொஹமத் ரிப்னாஸ், தற்போதைய அணித் தலைவர் சுபாஷ் மதுஷான், சஜித் குமார, மொஹமத் பஸால், அசிக்கூர் ரஹுமான், சரித் பண்டார ரட்நாயக்க ஆகியோரே அணியில் இடம்பெறும் சிரேஷ்ட வீரர்களாவர். ஏனைய அனைவரும் இளம் வீரர்களாவர். அவர்களில் மூவர் பாடசாலை வீரர்கள்.

எதிர்காலத்தில் இலங்கையில் ஒரு பலம்வாய்ந்த கால்பந்தாட்ட அணியை உருவாக்கும் நோக்கத்துடன் இளம் வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அணி பயிற்றுநர் றூமி பக்கிர் அலி தெரிவித்தார்.

மாலைதீவுகளில் முதல்தரப் போட்டிகளில் விளையாடிவரும் கோல்காப்பாளர் சுஜான் பெரேராவையும் இலங்கை குழாத்தில் இணைத்துள்ளதாகவும் அவர் பெரும்பாலும் போட்டிக்கு முன்னர் நாடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை அணியில் வட பகுதியைச் சேர்ந்த செபமாலை நாயகம் ஜூட் சுபன், சந்தியா மரியதாஸ் நிதர்ஷன் (இருவரும் யாழ்ப்பாணம்), யோகேந்திரன் டக்சன் பியூஸ்லாஸ் (மன்னார்), கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமத் முஷ்தாக் (மட்டக்களப்பு) ஆகியோர் இடம்பெறுகின்றனர். 

இலங்கை குழாம்

கோல்காப்பாளர்கள்: சுஜான் பெரேரா, கவீஷ் லக்ப்ரிய பெர்னாண்டோ, மொஹமத் ராசிக் ரிஷாத், தனுஷ்க ராஜபக்ஷ. 

பின்கள வீரர்கள்: சுபாஷ் மதுஷான் (அணித் தலைவர்), உயத கீர்த்தி குமார, யோகேந்திரன் டக்சன் பியூஸ்லாஸ், அசிக்குர் ரஹுமான், ஜூட் சுபன், சமித் சுபாஷன பெர்னாண்டோ, சரித்த பண்டார ரட்நாயக்க. மத்திய கள வீரர்கள்: அபீல் மொஹமத், சசங்க டில்ஹார, சமீர சஜித் குமார, மொஹமத் ஹஸ்மீர், மொஹமத் ரிப்னாஸ், சந்தியா மரியதாஸ் நிதர்ஷன், மொஹம் முஷ்தாக், சத்துர லக்ஷான் தனஞ்சய. 

முன்கள வீரர்கள்: மொஹமத் பஸால், ஜொஹார் மொஹமத் ஸர்வான், மொஹமத் சபீர், அசேல மதுஷான், சத்துரங்க பெரேரா.

Ninaivil

திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019