2 மாதங்களில் ரூ. 28,900 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம்: முகேஷ் அம்பானி அசத்தல்!

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும், வர்த்தகராகவும் திகழும் முகேஷ் அம்பானி கடந்த 12 மாதங்களில் மட்டும் ரூ. 28,900 கோடி அளவிற்கு 12 பெரிய வர்த்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். 

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிமிடெட் திகழ்கிறது. இதன் மேலாண்மை இயக்குனராக முகேஷ் அம்பானி உள்ளார். 

சமீபத்தில் ஜெப்ரீஸ் குழுமம் எல்எல்சி மற்றும் ப்ளூம்பெர்க் ஆய்வு வெளியிட்டது. இதில் முகேஷ் அம்பானி கடந்த 12 மாதங்களில் ரூ. 28,900 கோடி அளவிற்கு 12 பெரிய வர்த்த ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 10 ஒப்பந்தங்கள் வாடிக்கையாளர்கள் தொடர்பானது. இத்துடன் கடன் சிக்கலில் தவித்த டெக்ஸ்டைல் நிறுவனங்களையும் வாங்கியுள்ளார். உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை நிறுவுவதற்கும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். 

இத்துடன் நின்று விடாமல் தொலை தொடர்பு, சில்லறை விற்பனை, பொழுதுபோக்கு என்று அனைத்து துறைகளிலும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.கடந்த ஓராண்டுக்கு முன்பு முகேஷ் அம்பானி ஜியோ நெட்வொர்க்கில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு இந்திய தொலை தொடர்பு நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார். மெகா இலவச டேடா, குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் என்று தொடர்ந்து ஜியோவில் இருந்து அறிவிப்புகள் வெளியாகி வந்தது. 

தொலை தொடர்பு, சில்லறை விற்பனை, பெட்ரோகெமிக்கல்ஸ், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் 2019 மார்ச் 31ஆம் தேதியுடன் 53 பில்லியன் டாலர்களை ரிலையன்ஸ் முதலீடு செய்துள்ளது. இதில் தொலை தொடர்பு துறையில் மட்டும் 36 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. அதே சமயம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் கடந்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து, 32 பில்லியன் டாலராக உள்ளது. 

இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் JioGigafiber திட்டம் உள்பட பல புதிய அறிவிப்புகளையும் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். 

Ninaivil

திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019