தேசத்தின் புயலான- நெருப்பு மனிதர்கள்!!

மற்­­வர்­கள் இன்­புற்­றி­ருக்க வேண்­டும் என்­­தற்­கா­கத் தன்னை இல்­லா­தொ­ழிக்­கத் துணி­வது தெய்­வீ­கத் துற­­றம். அந்­தத் தெய்­வீ­கப் பிற­வி­கள்­தான் கரும்­பு­லி­கள்.”- தேசி­யத் தலை­வர்

தமி­ழீழ விடு­­லைப் போராட்ட வர­லாற்­றின் ஞாப­கப் பக்­கங்­­ளுள், தமிழ் மக்­கள்


மறந்­தி­ருக்க முடி­யாத சாவுக்கு விலங்­கிட்ட மனி­தர்­­ளின் நினை­வு­களை தந்த மாதம் ஜூலை.பல சம்­­வங்­கள் நினை­வாக நீண்டு விரிக்­கின்ற போதும் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 05 ஆம் திகதி, ஒப்பற்ற திருநாளாய் விளங்கி, தேசப் புயல்­­ளின் வீர வர­லாற்றை கண்­ணீர் பூக்­­ளால் சுகந்­தம் செய்­கின்­றது. கரும்­புலி கப்­டன் மில்­­ரின் உயிர் தியா­கம் தனை விடு­­லை­யின் சொரூ­­மாக்கி உரிமை வேட்­கை­யின் தரி­­னங்­களை தாய் தேச­மெங்­கும் சூட்­டு­கின்­றன.

இரா­ணுவ ஆக்­கி­­மிப்பு
1987
ஆம் ஆண்டு காலப்­­கு­தி­யில் தமி­ழர் தேச­மெங்­கும் சிங்­கள இரா­ணு­வத்­தின் பிர­சன்­னம் அதி­­மாக இருந்­தது. கொடுங்­கோல் ஆட்­சி­யின் வழி எங்­கும் தீராத அரா­­கங்­கள் நிகழ்ந்­தன.வட­­ராட்சி நெல்­லி­யடி மகா­வித்­தி­யா­லத்­தி­லும் சிங்­­ளப்­­டை­யி­னர் குவிக்­கப்­பட்­டி­ருந்­­னர்.வட­­ராட்­சி­யில் மேற்­கொள்­ளப்­பட்டலிப­ரே­சன் ஒப்­பி­ரே­சன்இரா­ணுவ நட­­டிக்கை மூலம் தாம் பெற்­றுக்­கொண்ட வெற்­றி­யின் குதூ­­லிப்­பில் சிங்­­ளம் திழைத்­தி­ருந்­தது. வட­­ராட்சி வாழ் மக்­கள் அக­தி­­ளாக வெளி­யே­றி­யி­ருந்­­னர். இதற்­குச் சமாந்­­­மாக சிங்­­ளத் தலை­மை­கள் 2009 களில் பெற்ற களிப்­பினை போன்­­தான ஓர் வெற்றி முழக்­கத்தை கொழும்­பி­லும் இன­வாத வெறித்­­னத்­தின் சாட்­டு­­லாய் கொண்­டாடி மகிழ்ந்­தி­ருந்­­னர்.

 

நெல்­லி­­டிப் படைத்­­ளம் 
மீதான தாக்­கு­தல்
இந்த சந்­தர்ப்­பத்­திலே நெல்­லி­­டிப் படைத்­­ளத்தை அழித்து இந்த ஈனப் பிற­வி­­ளின் இறு­மாப்பை தகர்த்­தெ­றிய வேண்­டும், எமது உறு­தியை நிலை­நாட்ட வேண்­டும் என்ற தீர்­மா­னத்தை தேசி­யத்­­லை­வர் கொண்­டி­ருந்­தார்.அந்த விருப்­பம் தேசப்­பு­­லாக மாற்­றம் கொண்­டது. தியா­கம் எனும் நற்­பணி செய­லு­ரு­வம் பெற்­றது.நெல்­லி­­டிப் படைத்­­ளம் மீதான தாக்­கு­தல் குறித்த அனைத்­து தயார்­­டுத்­தல்­­ளும் நிறை­வு­று­கின்­றன.

தேசப்­பு­­லாக,விடு­­லை­யின் வீர­னாக கப்­டன் மில்­லர் தேர்வு செய்­யப்­பட்­டான்.ஜூலை மாதம் 5ஆம் திகதி இரவு 7.00மணி 3 நிமி­டங்­கள், கந்­தக மேனி­­னாய் வெடி மருந்­து­களை சுமந்­­படி கப்­டன் மில்­லர் பய­ணித்த வாக­னம் இரா­ணுவ முகா­மிற்­குள் பாய்ந்­தது. தியா­கம் எனும் சுதே­சம் எங்­கும் வீசி­யது. விடி­­லின் சுகந்­தம் தனை தேசத்­தி­டம் பரி­­ளித்­தது. நூற்­றுக்­­ணக்­கான இரா­ணு­வத்­தி­னரை அழித்­தொ­ழித்து பல­நூறு படை­யி­னரை விழுப்­புண் அடை­யச் செய்து ஆண­வத்­தின் மாயையை தீயிட்­டுக் கொளுத்­தி­யது. விடு­­லை­யின் பய­ணத்­தில் புதிய வர­லாற்­றுப் பக்­கங்­களை உரு­­கித்­தது.

இப்­போ­தும் தியா­கத்­தின் சுவா­­மாய் அந்த நினை­வு­கள் எங்­கும் பரந்து கிடக்­கி­றது. நல் மனி­தங்­­ளிடை சிந்­­னை­யின் ஒளிர்­வாய் சுடர்­வி­டு­கின்­றது.விடு­­லை­யின் எண்­ணம் தனை நித்­திய சாத­கம் செய்­கி­றது.
ஆம், போரி­யல் வர­லாற்­றிலே இவ்­வா­றான தாக்­கு­தல் ஒன்று முதன் முத­லாக நிகழ்த்­தப்­பட்­டது இதுவே முதல் தடவை.மில்­லர் கரும்­பு­லித் தாக்­கு­தல் நடத்தி இன்­று­டன் 31 ஆண்­டு­கள் கடந்­து­வி­டு­கின்­றது. விடு­தலை உணர்­வோடு நடந்­து­கொள்­ளப் பணிக்­கி­றது.ஞாப­கங்­­ளிடை மீளாத வசந்­தங்­களை வசந்­­னாக,அந்த நாமம் சூடிக் கொண்ட புனி­­மாக (தி)யாகம் செய்­கி­றது.

வாழ்­கைப் பய­ணம்
யாழ்ப்­பா­ணம் கர­வெட்டி பிர­தே­சத்தை சேர்ந்­­வன் கப்­டன் மில்­லர்.இவ­னு­டைய இயற்­பெ­யர் வல்­லி­பு­ரம் வசந்­தன். தமி­ழீழ விடு­­லைப் புலி­கள் அமைப்­பில் ஒரு முக்­கிய உறுப்­பி­­ராக விளங்­கி­னான். 1966 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முத­லாம் திகதி தாய் மண்­ணில் தவழ்ந்த இவன் விடு­தலை இலட்­சி­யத்­தில் முதல் கரும்­பு­லி­யாக மாற்­றங்­கொண்­டான். விடு­­லைப் போ­ராட்ட வர­லாற்­றின் திருப்­பு­மு­னை­யாக அமைந்­து­விட்­டான்.

மில்­லர் குடும்­பத்­திலே இரண்­டா­வது மகன்.துடி­யாட்­­மா­­வன்.வாக­னங்­களை ஓட்­டு­­தில் திற­மை­யா­­வன்.தகப்­­னார் வல்­லி­பு­ரம் இலங்கை வங்­கி­யின் ஊழி­­ராக கடமை புரிந்­­வர்.

விடு­­லைப் பய­ணம்
தேசத்­தின் மீது கொண்ட பற்­று­று­தி­யால் விடு­­லைப் பய­ணத்­திலே தன்னையும் ஓர் அங்கத்தவனாக இணைத்­துக் கொண்­­ான் மில்லர்.குறிப்­பாக தமிழ் மக்­­ளின் மூல­­­மான கல்­வி­யின் திருச் சொரூ­­மான, அறி­வூட்­டத்­தின் பொக்­கி­­மான யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தின் மீதான தீயி­டல் சம்­­வம், அதே போன்று தமிழ் மக்­கள் மீது கட்­­விழ்த்­து­ வி­டப்­பட்ட இனக் கல­­ரம் என்­பன அவனை முற்­றாக தமிழ் மக்­­ளின் விடு­­லை­யின் பால் ஈர்த்­து­ விட்­டது.அதற்­கான இலட்­சிய உறுதி கொண்ட திட­மான பாதை­யிலே அங்­கத்­து­­னாக சேர்ப்­பித்­தது.

தாய் மண்­மீ­தும் தன் மக்­கள் மீதும் கொண்ட அள­வற்ற பாசம் என்­­தும், தன் இன விடு­­லை­யின் மீதான நேசம் என்­­தும் முகம் மறைத்து முக­வரி மறைத்து எத்­­னையோ பெரும் தாக்­கு­தல்­களை நடத்தி சாதனை படைக்­­வும், தமி­ழன் என்ற வீரத்­தின் நிமிர்­வினை உலக நாடு­­ளின் மத்­தி­யிலே அற்­பு­தம் செய்­தி­­வும் ஆரம்­­மாக அமைந்­து­விட்­டது இவ­னது தற்­கொ­டை­யெ­னும் தியா­கம்.இதனை தமி­­ராய் நினை­வு­ கொள்­ளும் இந்த நன்­நாள் புனி­­மா­னது.

கரும்­பு­லி­­ளின் தியா­கம்
அந்­­­கை­யிலே விடு­­லைப் போராட்­டத்­தின் ஒவ்­வொரு திருப்­பு­மு­னை­­ளி­லும் கரும்­பு­லி­­ளின் தியா­கம் உயர்ந்து நிற்­கின்­றது.இவர்­­ளின் தியா­கப் பாதை­கள் என்­பது 2000 ஆம் ஆண்டு கட்­டு­நா­யக்கா வான்­­டைத்­­ளம் மீதான தாக்­கு­­லாக,தென்­­கு­தி­யில் பல நிழற்­­ரும்­பு­லிப் பாய்ச்­­லாக,2007 ஆம் ஆண்டு அனு­ரா­­பு­ரம் வான்­­டைத்­­ளம் மீது எல்­லா­ளன் வடி­­மாக, 2009 ஆம் ஆண்டு வானோடி கரும்­பு­லி­­ளின் பறத்­­லாக சிறந்­தி­ருக்­கி­றது.தமி­ழீழ வர­லாற்­றிலே தமி­­னின் வீரத்தை உரி­மை­யின் மீதான பற்­று­­லாக சாட்­டு­தல் செய்து நிற்­கின்­றன.

விடி­­லின் பாதை­­ளைச் 
சீர் செய்ய முன்­­கர்­வோம்
ஆக,தமி­ழர் விடு­­லைப் போராட்­டத்­தின் தடைநீக்­கி­­ளாக,உயி­ரா­யு­­மாக,இலட்­சி­யத்­தின் இரும்பு மனி­தர்­­ளாக உட­லோடு கந்­­கம் சுமந்து எதி­ரி­யின் ஆண­வத்தை தகர்த்­­ழித்த இந்த மனி­தர்­களை மறந்­து­விட முடி­யாது.இவர்­கள் புரிந்த சாத­னை­களை நினைந்து அற்­பு­தம் காண வேண்­டும்.அழி­யாத சுடர்­கள் எங்­கும் ஒளிர்­கின்­றன.

                                                                                                                                                                                                                                                                                                    

Ninaivil

திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019