சென்னையில் 9-ந்தேதி கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார்: தமிழிசை தகவல்

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா 9-ந்தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம் சென்னை வி.ஜி.பி.யில் நடைபெறும் தேர்தல் தயாரிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழகத்தில் தாமரை மலராது என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி இருக்கும்.

இன்று இருக்கும் சவாலான சூழ்நிலையில் அடிமட்டத்தில் இருந்து எப்படி கட்சியை எடுத்து சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை எங்கள் தலைவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.எங்கள் கட்சியில் 5 வாக்குச்சாவடியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை மட்டும் தான் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற அழைத்து இருக்கிறோம்.

கூட்டத்தை கூட்டுவது எங்கள் நோக்கம் அல்ல. இது கட்சி ரீதியான, அமைப்பு ரீதியான கூட்டம் தான். அரசியல் ரீதியான கூட்டம் கிடையாது.

அமைப்பு ரீதியான விவாதங்களும், கலந்துரையாடல்களும் மட்டும் தான் இதில் இருக்கும். அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தி இருக்கிறோம். அதன் வெளிப்பாடு தான் இந்த நிகழ்ச்சி.

நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் 11 பேர் இடம் பெற்று இருக்கின்றனர். வழிகாட்டுவதற்கும், கொள்கை ரீதியாக முடிவை எடுப்பதற்கும், ஆலோசிப்பதற்கும் இந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த குழுவுடன் அமித்ஷா 2 மணி நேரம் கலந்து பேசுகிறார். அதன்பின்னர், சகோதர அமைப்புகளை சார்ந்த சில தலைவர்களுடன் சின்ன சந்திப்பு இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் வழிகாட்டுதல் குழு தமிழக அரசியலை ஆராய்ந்து அறிக்கை கொடுப்பார்கள். எதிர்க்கட்சிகளின் நிலை எப்படி இருக்கிறது? என்ற கலந்துரையாடலுக்கு பின்பு வியூகங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018