தமிழகம் பாலைவனமாகும் அபாயம்

சிவகங்கை : நிலத்தடி நீர் பாதாளத்திற்கு செல்வதால் தமிழகம் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மணல் கொள்ளையால் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் 7 ஆண்டுகளில் 6 மீட்டர் குறைந்துள்ளது. மழை நீர் சேமிப்பு தீவிரப்படுத்தப்பட்டால் மட்டுமே 'டே ஜீரோ' அபாயத்தில் இருந்து தமிழகம் தப்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.நிலத்தடி நீர்மட்டம் வற்றி தண்ணீருக்கு பெரும் பஞ்சம் நிலவுவதை 'டேஜீரோ' என்கின்றனர். தமிழகத்தில் சில ஆண்டுகளாக தொடர்ந்து மழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆறு, கண்மாய், ஓடைகளில் வரைமுறை இன்றி மணல் அள்ளப்பட்டதால் பொழியும் மழைநீர் கூட தேங்குவதில்லை. மழைநீர் சேமிப்பு கானல்நீராகி விட்டது. நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்திற்கு செல்கிறது.திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டத்தை மாதம்தோறும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

கடந்த மாதம் சிவகங்கை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 9.07 மீ., இருந்தது. மதுரையில் 9.28, திண்டுக்கல்லில் 11.65, தேனியில் 10.72, ராமநாதபுரத்தில் 5.19, விருதுநகரில் 8.77, திருவள்ளூரில் 6.12 மீ., காஞ்சிபுரத்தில் 4.51

திருவண்ணாமலையில் 7.39, வேலுாரில் 7.99, தர்மபுரியில் 11.06, கிருஷ்ணகிரியில் 8.06, கடலுாரில் 7.64, விழுப்புரத்தில் 8.09, தஞ்சையில் 3.66, திருவாரூரில் 4.08, நாகப்பட்டினத்தில் 4.88, திருச்சியில் 10.25, கரூரில் 6.36, பெரம்பலுாரில் 9.28, புதுக்கோட்டையில் 8.84, அரியலுாரில் 5.72, சேலத்தில் 11.69, நாமக்கல்லில் 11.71, ஈரோட்டில் 10.81, கோவையில் 15.96, திருப்பூரில் 11.56, நீலகிரியில் 2.30,நெல்லையில் 6.40, துாத்துக்குடியில் 6.12, குமரியில் 6.15 மீ., உள்ளது.

2011 டிசம்பரில் சிவகங்கையில் 2.56 மீ., ஆக இருந்தது. ஏழு ஆண்டுகளில் 6 மீ., வரை நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. தேனி, ராமநாதபுரத்தில் 3 மீ., விருதுநகரில் 5 மீ., திண்டுக்கல்லில் 7 மீ., மதுரையில் 6 மீ., வரை குறைந்துள்ளது. நீலகிரியை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 4 முதல் 7 மீ., வரை குறைந்துள்ளன.

பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மழை குறைவு, நிலத்தடிநீர் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் நீர்மட்டம் குறைகிறது. நாளுக்கு நாள் நிலத்தடிநீரை உறிஞ்சி எடுப்பது அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் டே ஜீரோ ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது. 2017 யை ஒப்பிடும்போது 2018 ல் நிலத்தடி நீர் சற்று உயர்ந்துள்ளது ஆறுதலளிக்கக்கூடியது,'' என்றார்.


Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018