தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை வீரர் பலி

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை முக்குளிப்பவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் 12 பள்ளி மாணவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் மாயமாகினர். சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட தேடுதலில் அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

அவர்கள் மாயமாகி 9 நாட்கள் கழித்து தான் அவர்களை பற்றிய தகவல் கிடைத்தது. அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போதிலும் அவர்களை அங்கிருந்து மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படையினர், முன்னாள் கடற்படை முக்குளிப்பவர்கள், சர்வதேச நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை முக்குளிப்பவர்(டைவர்) குகையில் போதிய காற்று இல்லாததால் மூச்சு திணறி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து பயிற்சிக்காக கடந்த மாதம் 23ம் தேதி வெளியே சென்ற சிறுவர்கள் வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018