டெல்லியில்
வீடுகளுக்கு
ரேஷன் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை அம்மாநில அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்து இருந்தது. அதன்படி, வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை அமல்படுத்த டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு டெல்லி உணவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.