விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்தித்த முன்னாள் இலங்கை கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்கள் ; பேசிய விடயங்கள் இதோ ?

இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து எடுத்துக் கூறியுள்ளனர்.

குறித்த சந்திப்பு நிறைவடைந்த நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜூன ரணதுங்க,


'குறிப்பாக கிரிக்கெட் சபையில் இருந்த முன்னாள் அங்கத்தவர்களுடன் கலந்தாலோசித்தோம். எமக்கு கடமையொன்று உள்ளது கிரிக்கெட் தொடர்பில் கவனம் செலுத்த.  ஆகவே தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எமது கிரிக்கெட்டின் தற்போதைய நிலை மற்றும் கிரிக்கெட்டை பாதித்துள்ள விடயங்கள் தொடர்பாக நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

நான் இன்று நம்பிக்கையில்லாமலே இங்கு வந்தேன். காரணம் கடந்த காலத்தில் இருந்த நம்பிக்கை தற்போது இல்லாமல் போய்விட்டது. இவர்கள் விளையாட்டு வீரர்களை பயன்படுத்தி காலத்தை வீணாக்கிவிட்டார்கள். எமக்கு இதுபற்றி பல சந்தேகங்கள் இருந்தன. ஆகவே நாங்கள் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வரவே இங்கு வந்துள்ளோம்.

எனினும் தற்போதைய அமைச்சருக்கும் சில கால அவகாசம் கொடுப்பதற்கு நாம் எண்ணியுள்ளோம். நாங்கள் தற்போதைய கிரிக்கெடின் நிலையினை  தெளிவுப்படுதியுள்ளோம். 

நாங்கள் அதிகம் எதிர்பார்ப்பது கிரிக்கெட்டை எப்படி கட்டியெழுப்புவதென்பதாகும். இன்று அநேகமானோர் கிரிக்கெட்டில் இருந்து வெளியில் இருப்பதற்கு காரணம் அநாவசியமற்றவர்கள் கிரிக்கெட் நிர்வாகத்தில் இருப்பதாலேயே. இதனை நாங்கள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெளிவுபடுத்திவுள்ளோம். 

கிரிக்கெட் கீழ் நிலையில் இல்லை ஆனால் விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக நாங்கள் முடிவு எடுத்தோம் அமைச்சருடன் கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவெடுக்க. 

அவரை தெளிவுபடுத்த தேவையான காரணங்களை கூறியுள்ளோம். எங்களால் தீர்மானம் எதுவும் எடுக்க முடியாது. விளையாட்டுத்துறை அமைச்சரே சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும். 

மேலும் அவர் சில சிரேஷ்ட வீரர்களை சந்தித்துப் பேசவுள்ளார். அதன்பின் அமைச்சர் தீர்க்கமான முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கின்றேன். நாம் கிரிக்கெட் சபையின் யாப்பை மாற்றுமாறு கேரிக்கை விடுத்துள்ளோம். காரணம் தேர்தல் முறையை மாற்றம் செய்ய. பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாதவர்களே கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அல்லது தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கிரிக்கெட் சபைத் தேர்தலில் போட்டியிட்டால் இந்த சூதாட்டக்காரர்களை எதிர்த்து அவர்களால் கூட வெற்றிபெற முடியாது. 

ஆகவேதான் நாம் யாப்பை முதலில் மாற்ற வேண்டும். அதேசமயம் கிரிக்கெட்டையும் மறுசீரமைக்கும் பணியை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.

நாங்கள் தெரிவித்த கருத்துக்களை விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். அவரும் எம்மிடம் பல வினாக்களை கேட்டார். நாங்கள் எதிர்பார்ப்பது அவர் எதிர்காலத்தில் சரியானதை செய்வார் என்று. காரணம் கடந்த காலத்தில் சரியான செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை. புதிய அமைச்சர் நிறைய காலத்தை எடுக்க முடியாது. காரணம் உலகக்கிண்ணப் போட்டி வருகின்றது. தென்னாப்பிரிக்க அணி வந்துள்ளது. இன்று கிரிக்கெட் கீழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதனை மீண்டும் கட்டியெழுப்பவேண்டிய தேவையுள்ளது. 

வெளிமாவட்டங்களில் திறமையானவர்கள் உள்ளனர். அவர்களை வெளிக்கொண்டுவரவேண்டும். இவ்வாறான மாற்றங்களை கிரிக்கெட்டில் ஏற்படுத்தவே நாம் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டோம்.

எனக்கு தெரிந்தவரை  6 கரிக்கெட் சபைகள் காணப்பட்டுள்ளன. இந்தியாவில் நீதிமன்ற தீர்ப்பிற்கு  அமைய  தெரிவு செய்த சபை இயங்குவதில்லை. தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஐ.சி.சி தலைவரை சந்தித்துள்ளார். 


நாங்களும் அவரை சந்தித்துள்ளோம். இன்று இங்கு வந்த அனைவரும் முன்னர் கிரிக்கட் சபையில் இருந்தவர்கள். தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறந்த வழக்கறிஞர் ஆவார். 

ஆகவே சட்டத்திற்கமைய குறிப்பாக விளையாட்டு நீதியில் மூன்று விடயங்களை சுட்டிக்காட்டினோம். முன்னாள் விளையாட்டு அமைச்சருக்கு விளையாட்டு நீதியில் இருந்ததை பார்க்கமுடியாமல் போய்விட்டது. ஆகவே நாங்கள் நினைக்கின்றோம் தற்போதைய அமைச்சர் சிறந்த வழக்கறிஞர் என்பதால் அவரால் நீதியை பார்க்கமுடியும் என்று. அவர் சரியானவர்களை தெரிவு செய்து கிரிக்கெட்டில் பல மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்.

'நாங்கள் தேர்தலுக்கு வர எவ்வித  ஆசையும் இல்லை காரணம் தேர்தலுக்கு வந்து எந்த பிரயோசனமும் இல்லை.  இதுபற்றி எதிர்காலத்தில் தீர்மானிப்போம். யாப்பினை மாற்றியே கிரிக்கெட் தேர்தலுக்கு செல்லவேண்டும். மீண்டும் சரியானவர்கள் வரமாட்டார்கள் சூதாட்டக்காரர்களே வருவார்கள். அரசாங்கத்தின் அமைச்சர் என்ற ரீதியில் நான் கவலைப்படுகின்றேன் இன்று கிரிக்கெட்டின் நிலையை பார்த்து. நான் எதிர்பார்க்கின்றேன் இந்த நிலை எதிர்காலத்தில் மாறும் என்று என அவர் மேலும் தெரிவித்தார்.Ninaivil

திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019