ராகுல் போதைப்பொருள் பயன்படுத்துகிறார் - சு.சாமி சர்ச்சை கருத்து.!

மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜகவின் முன்னணி தலைவர்கள் பலர் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பலவற்றை தெரிவித்து அது அரசியல் மற்றும் சமூக அரங்கில் மிகுந்த பரபரப்பினை கிளப்புவது வாடிக்கையான ஒன்றே. அந்த வகையில் எப்போதாவது மட்டுமல்ல எப்போதுமே சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துவருகிற சுப்ரமணியன் சாமி.

பஞ்சாப் மாநிலத்தில், அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகின்றது. பஞ்சாப்பில் போதைப் பொருட்கள் கடத்துவதும், விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதைத் தடுக்க அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் போதை மருந்துகளை கடத்துவதில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், "அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் போதைப்பொருள் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த நிலையில், மேற்கண்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சாமி, "பாதல் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த சோதனையில் ராகுல் காந்தியை ஈடுபடுத்துவது குறித்து பாதல் கூறவில்லை.

ராகுல் காந்தி கொக்கைன் எனும் போதைப் பொருளை பயன்படுத்துகிறார். அவர் மருத்துவ சோதனை செய்தால் போதைப் பொருள் சோதனையில் தோல்வியடைவார்" என தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் மிகுந்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018