விஜயகலாவிற்கு புளொட் பொருத்தம்:அழைக்கின்றார் கஜதீபன்!

தமிழர்களின் வேணவாவைத் தெரிந்தோஇதெரியாமலோ உரக்கச் சொன்னமைக்காகப் பதவியைப் பறித்த பேரினவாதக் கட்சியில் இருந்து விலகி முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா தமது எதிர்கால அரசியலைத் தமிழ்த்தேசியப்பாதையில் முன்னெடுக்க வேண்டும் என புளொட் அமைப்பு சார்பு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.

உங்களுடைய கட்சியின் சகாக்களே உங்களைப் பைத்தியக்கார வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் எனச் சொல்லும் வகையிலும்இ தனிப்பட்ட தொலைபேசி அழைப்பினை பகிரங்கமாக ஒலிபரப்பும் அளவுக்கும் அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபட்ட பின்பும் நீங்கள் அந்த அணியிலேயே தான் தொடர்ச்சியாகத் தொடருவீர்களேயானால் உங்கள் மீது இன்றைக்கு உண்மையைத் தெரிந்தோ தெரியாமலோ உரக்கச்சொன்னீர்கள் என்பதான நல்லபிப்பிராயம் மண்ணாகிப்போய்விடும் எனவும் அவர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அவர் நேற்று வெள்ளிக்கிழமை(06) இரவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ கடந்த 18ஆண்டுகளாக இந்த மண்ணில் தமிழ்த் தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டிஇ தமிழினம் இன்றைக்கு வரைக்கும் அனுபவித்துக்கொண்டிருக்கக் கூடிய கடும் நெருக்கடிகளுக்கும் காரணகர்த்தாகளாக இருந்த டி.எஸ்.சேனநாயக்கஇ டட்லி சேனநாயக்கஇ ஜே.ஆர்.ஜெயவர்த்தனஇ ஆர்.பிரேமதாஸ ஆகிய தலைவர்கள் வரிசையில் எந்த விதத்திலும் குறைந்து விடாத தமிழ் விரோத சிந்தனை மிக்க ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியில் நேரடிப் பிரதிநிதியாக அவருடன் சேர்ந்து உழைத்து இந்த மண்ணில் 1952 இல் தமிழினத் தலைவர் தந்தை.

செல்வாவின் வெற்றியைப்பறித்து பாராளுமன்றம் சென்று தபால்த் தந்தி அமைச்சராகவிருந்த சு.நடேசபிள்ளைக்குப் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சிக்குக் கடந்த 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தல்களில் யாழில் ஒரு நேரடிப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுத்துச் சிங்களத்தேசியக் கட்சிகள் மீது தமிழ் மக்கள் பரிவோடு இருப்பதைப்போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்திய நன்றிக் கடனுக்காகத் தன்னும் அமரர்.தி.மகேஸ்வரனுக்கு கடைசிவரை ஒரு பொறுப்பான அமைச்சுப்பதவி வழங்கப்படவே இல்லை.

இத்தனைக்குப் பிறகும் அந்த அணியின் வெற்றிக்காகவே இன்று வரை பாடுபட்டது மாத்திரமல்லாமல் நூற்றுக்கு நூறுவீதம் தமிழ்மக்கள் வாழும் எங்களுடைய கிராமங்கள் வரை பல்வேறான உத்திகளைப் பயன்படுத்திச் சிங்களத் தேசியக் கட்சியைக் கொண்டு சேர்த்து நச்சுவிதையை எமது தூய வளமான மண்ணிலே ஊன்றி தன்னால் முடிந்தவரை சிங்கள மேலாதிக்கத்தை எமது மக்களை ஏற்கச்செய்வதுக்கு கடுமையாக உழைத்தமைக்கான சிறு நன்றி கூட இல்லாமல் சிங்கள பேரினவாதமானது தனது கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளதென தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டை
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
வவுனியா இறம்பைக்குளம்
லண்டன்
9 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சிவஞானம் பத்மநாதன்
திரு சிவஞானம் பத்மநாதன்
கோண்டாவில் கிழக்கு
கனடா Scarborough
10 யூலை 2018
Pub.Date: July 12, 2018