விம்பிள்டன் டென்னிசில் வீனஸ் அதிர்ச்சி தோல்வி - செரீனா, பெடரர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 6-3, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கோல்ஸ்கிரீபரை (ஜெர்மனி) விரட்டி 4-வது சுற்றை எட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லினார்ட் ஸ்டிரப்பை (ஜெர்மனி) வீழ்த்தி அடுத்த சுற்றை எட்டினார்.

ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 4-6, 6-7 (4-7), 1-2 என்ற செட் கணக்கில் பிரிடெரிக் நீல்சென் (டென்மார்க்)- ஜோ சிலிஸ்பரி (இங்கிலாந்து) இணைக்கு எதிராக பின்தங்கி இருந்த போது, போபண்ணா காயமடைந்தார். இதனால் அவர் பாதியில் விலக, நீல்சென்-சிலிஸ்பரி ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-6, 7-6 (7-5), 6-8 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

அதே சமயம் 7 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தன்னை எதிர்த்த மிலாடெனோவிச்சை (பிரான்ஸ்) 7-5, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்றில் நடப்பு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 7-5, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் அலிசன் வான் உய்ட்வான்கிடம் (பெல்ஜியம்) மண்ணை கவ்வினார்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018