தாம்பரத்தில் 3 பேரை கத்தியால் குத்திய கொள்ளையர்

 தாம்பரம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற இருவரை, பிடிக்க சென்ற 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. ஒருவன் பிடிபட்ட நிலையில் தப்பி ஓடிய இன்னொருவனை பிடிக்க போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. மடிப்பாக்கம் நந்திநகர் ஏரிக்கரை பகுதியில் வசித்துவருபவர் மாலா (வயது 31). இவர், நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் மாலாவை வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.


ஆனால், மாலா தங்க சங்கிலியை இறுக பிடித்துக்கொண்டு உதவிக்கேட்டு சத்தம் போட்டுள்ளார். அவ்வழியாக பைக்கில் வந்த நந்தக்குமார் என்பவர் கொள்ளையர்களின் பைக்கை இடித்து கீழே தள்ளியதன் விளைவாய், அந்த கொள்ளையர்கள் இருவரும் அங்கு கூடிய பொதுமக்கள் பிடியில் சிக்கினர்.
சற்றும் எதிர்பாராத வகையில் கொள்ளையர்கள் தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்தியை கொண்டு பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு ஒருவர் தப்பியோடினார்.

மற்றொருவரை பிடித்து மாம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். தாக்குதலில், மோகனரங்கன், கலைவாணன், சுதாகர் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். ஒருவருக்கு நெஞ்சு பகுதியில் 9 தையல் போடப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு முதுகு, வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இன்னொருவர் லேசான காயங்களுடன் உள்ளார். இவர்களுக்கு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இவர்களை, தெற்கு இணை ஆணையர் மகேஷ்வரி நேரில்  சென்று நலம் விசாரித்து,
விசாரணை நடத்தினார். பிடிப்பட்ட நபர் பிரபா என்று தெரியவந்துள்ளது. தப்பியோடிய கொள்ளையனை
போலீசார் தேடிவருகின்றனர்.


Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018