ஒரே நேரத்தில் தேர்தல்: அதிமுக கடும் எதிர்ப்பு

மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான சட்ட ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் துவங்கியது.
இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, சட்ட அமைச்சர் சி.வி.
சண்முகம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.  தமிழக சட்டமன்றத்தின் பதவி காலம் 2021-ல் தான் முடிவடைகிறது என்பதால் அடுத்த ஆண்டில் இருந்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என தெரிகிறது. இதே கருத்தை வலியுறுத்தி சட்ட ஆணையத்திற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் கடிதம் எழுதி உள்ளனர்.


கருத்து தெரிவிக்க திமுகவிற்கு காலை 11 மணிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. திருச்சி சிவா தலைமையில் திமுக பிரதிநிதிகள் ஆஜராகி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் மத்திய அரசுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்ற அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.  ஒரே நாடு, ஒரே தேசம் என்ற கருத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு முன்மொழிந்து இருக்கிறது. இதற்கு சட்ட ஆணையமும் ஆதரவு தெரிவித்தது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக அரசியல் சட்டம் மற்றும் 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என சட்ட ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது. இது தொடர்பாக இன்றும், மாலையும் டெல்லி கான்மார்க்கெட் பகுதியில் உள்ள லோக் நாயக் பவனில் சட்ட ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் மு.தம்பித்துரை, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். 2016-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வதற்காகத்தான் மக்கள் வாக்களித்தனர். இப்போதைய நிலையில் 2 ஆண்டுகளே நிறைவு பெற்றுள்ளது. 2021 தான் பதவி காலம் நிறைவடையும். இந்த காலக்கட்டத்திற்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்பதால் அடுத்த ஆண்டில் இருந்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறையை அமலாக்க அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என தெரிகிறது.

2024 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறையை அமலாக்க முன் வந்தால் அதற்கு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவிக்கப்படும் என்றும் கட்சி வட்டாரத்தில் தெரிகிறது. சட்ட ஆணையத்திற்கு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எழுதி உள்ள கடிதம் வருமாறு:- நிலையான ஆட்சியை தரவேண்டும் என்பதற்காக 2016-ல் அதிமுகவுக்கு மக்கள் வாய்ப்பளித்தனர். தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் 2021-ல் நிறைவடைகிறது. தேர்தல் சமயத்தில் நிறைவேற்றுவதாக பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றினாலும், இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளன. சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை குறைப்பதால் மக்கள் விரும்பிய நிலையான ஆட்சி பாதிக்கப்படும். ஒரே சமயத்தில் தேர்தல் என்ற திட்டத்தால் தமிழக சட்டசபையின் ஆயுட்காலத்தை குறைக்க கூடாது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு ஜெயலலிதா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என கூறப்பட்டு உள்ளது.Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018