விக்கிக்கு எதிராகவும் நடவடிக்கை வேண்டும்: பொது எதிரணி கோருகின்றது

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னு க்கு எதி­ராக மாத்­திரம் நட­  வ­டிக்கை எடுத்தால் போதாது. அவரின் கருத்­து டன் ஒன்­றித்­தி­ருக்கும்  வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் உள்­ளிட்ட தரப்­பி­ன­ருக்கு எதி­ரா­கவும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுப்­ப­தாக கூட்டு எதிர்க்­கட்சி தெரி­வித்­துள்­ளது. 

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் கூட்டு எதிர்க்­கட்­சியின் இணை தேசிய அமைப்­பா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரஞ்சித் சொய்சா ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வரும்­போது இன­வா­தி­க­ளுக்கும் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கும் சலுகை வழங்­கி­யது. அதனால் நாட்டின் பாது­காப்­புக்­குக்கு பெரும் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. யுத்­தத்தை நிறை­வு­செய்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, “மீண்டும் நாட்டில் பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கு­வ­தற்கு வாய்ப்­புண்டு. எனவே அதற்கு இட­ம­ளிக்க வேண்டாம்” என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஏற்­க­னவே வேண்­டிக்­கொண்­டி­ருந்தார்.

எனினும் அது குறித்து அர­சாங்கம் கவனம் செலுத்­த­வில்லை. இவ்­வா­றான நிலை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் “மீண்டும் விடு­தலைப் புலி­களின் நிர்­வா­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும்” எனக்­கு­றிப்­பிட்­டுள்ளார். ஆகவே அவர் செய்­து­கொண்ட சத்­தி­யப்­பி­ர­மா­ணத்தை மீறி­யுள்ளார். எனவே அவரின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை நீக்க வேண்டும்.

அத்­துடன் வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னையும் நினை­வு­கூ­ரு­கின்­றனர்.மேலும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் முதல் தட­வை­யாக நேற்று (நேற்று முன்­தினம்) கரும்­பு­லிகள் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இது மிகவும் மோச­மான நிலை­வ­ர­மாகும். ஆகவே நாட்டின் பாது­காப்பு மிகுந்த நெருக்­க­டிக்கு உட்­பட்­டுள்­ளது.

மேலும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­க­லாவின் கருத்­துக்கு தமிழ் அர­சி­யல்­வா­திகள் பலரும் ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர். எனவே விஜ­ய­க­லா­விற்கு எதி­ராக மாத்­திரம் நட­வ­டிக்கை எடுத்தால் போதாது. அக்­க­ருத்­துடன் ஒன்­றித்து நிற்கும் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன், சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் இணைந்து நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும். அது தொடர்பில் தாம் அவதானமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018