போதை வழக்கறிஞர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை!: நாம் தமிழர் கட்சி மறுப்பு

தூத்துக்குடியில் வைகோவை தரக்குறைவாக பேசிய போதை வழக்கறிஞர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று நாம் தமிழர் கட்சி விளக்கம் அளித்திருக்கிறது.

பிரணாப் முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி வந்தார். அப்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில், தூத்துக்குடி இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராக வந்தார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் மதுபோதையில் இருந்த வழக்கறிஞர்கள் ஜெகதீஷ் மற்றும் முத்தையாபுரத்தை சார்ந்த வெற்றிவேல் ஆகிய இருவரும் மதுபோதையில் வைகோவை பார்த்து தரக்குறைவாக கூச்சல் போட்டனர். இதையடுத்து வைகோவுடன் வந்த ம.தி.மு.க.வினர், அந்த இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கைகலப்பாக மாறியது.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அந்த இரு போதை வழக்கறிஞர்களும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சமூகவலைதளங்களில பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், அந்த போதை வழக்கறிஞர்கள் இருவரும் தங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று நாம் தமிழர் கட்சி மறுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்திப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வந்த பொழுது 2 வழக்கறிஞர்கள் வைகோவை தகாத வார்த்தையில் திட்டியதாகவும் பின்னர் மதிமுகவினரால் தாக்கப்பட்டதாகவும் இணையதளங்களில் செய்தி வந்துள்ளது.

அதில் தாக்குதலுக்குள்ளான வழக்கறிஞர்கள் ஜெகதீஸ் மற்றும் வெற்றி ஆகிய இருவரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று வார இதழ் ஒன்றின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது முற்றிலும் தவறான செய்தி. அவர்களிருவரும் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் இல்லை. அவர்களுக்கு நாம் தமிழர் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. விசாரித்த வகையில் அவர்கள் ரஜினி மன்றத்தை சார்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது.

ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டர்லைட் போராட்டத்தில் கலவரம் செய்ததாக நாம் தமிழர் கட்சியினரை பொய் வழக்கு போட்டுக் காவல்துறை கைது செய்யும் சூழலில் இந்தச் சம்பவத்தில் நாம் தமிழர் கட்சி இணைத்திருப்பது மேலும் சிக்கலை உருவாக்கும் என்று கருதுகிறோம். “ என்று கூறப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018