தாயகத்தில் சம்பியன் வாய்ப்பை இழந்தது ரஷ்யா

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரஷ்யாவை 4-3 என்ற கோல் அடிப்படையில் குரோஷியா வெற்றி கொண்டது.

நேற்று (07) இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகிய இப்போட்டி இறுதி வரை மிகவும் பதட்டமான ஒரு போட்டியாக இரு நாடுகளுக்கும் காணப்பட்டது.

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் ரஷ்யா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷ்யா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷ்யா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.

இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதை பயன்படுத்தி ஆட்டத்தின் 100 ஆவது நிமிடத்தில் குரோஷியா வீரர் டொமகோஜ் விஜே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதலாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 115 ஆவது நிமிடத்தில் ரஷ்யா அணியின் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

முதலில் ரஷ்யாவின் வாய்ப்பை குரோஷியா கோல்கீப்பர் தடுத்துவிட்டார். ஆனால் குரோஷியா அணி முதல் வாய்ப்பில் கோல் போட்டது.

இரண்டாவது வாய்ப்பை ரஷ்யா கோலாக்கியது. ஆனால் குரோஷியாவின் வாய்ப்பை ரஷ்யா கோல் கீப்பர் தடுத்துவிட்டார். இதனால் மீண்டும் 1 – 1 என சமனானது.

மூன்றாவது வாய்ப்பை ரஷ்யா வீணாக்கியது. குரோஷியா மீண்டும் கோலாக்கியது. இதனால் 1-2 என முன்னிலை பெற்றது.

நான்காவது வாய்ப்பில் ரஷ்யாவும், குரோஷியாவும் கோல் அடித்ததால் 2-3 என முன்னிலை பெற்றது.

இறுதியாக, ஐந்தாவது வாய்ப்பை பயன்படுத்தி ரஷ்யா கோல் போட்டதால் 3-3 என சமனானது. இறுதிவாய்ப்பில் குரோஷியா மீண்டும் ஒரு கோல் அடித்ததால் 4-3 என வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டது.

Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018