4 தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல்!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி சென்றதாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே கச்சத்தீவு பிரச்சனை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. இதனை இலங்கை தாரை வார்த்து கொடுத்ததன் மூலம், அப்பகுதியில் மீன்பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஆழ்கடலில் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மீனவர்கள் நீண்ட தூரம் செல்கின்றனர். மேலும் காற்றின் திசையால் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. 

அப்படி வரும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை எச்சரிக்கை செய்யாமல், கைது செய்து அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக, இலங்கை மீனவப் பிரதிநிதிகள் சார்பில் அடிக்கடி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 

ஆனால் நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. தங்கள் நிலைக்கு உரிய தீர்வு காண, மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு படகில் 4 தமிழக மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதியில் சென்ற போது, இலங்கை கடற்படை அங்கு வந்தனர். இதையடுத்து எல்லைத் தாண்டி வந்ததாக கூறி, தமிழக மீனவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்கள் காங்கேசன் துறைமுக முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். 

Ninaivil

திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018