இராணுவத்தினர் என்ன வானத்திலா வசிப்பார்கள் – இராணுவத்தின் இன்ப துன்பங்களை அறிந்தவர் ஜனாதிபதியாக வரவேண்டும்

படையினரின் இன்ப துன்பங்களை அறிந்த ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என்று முன்னாள் மேஜர் ஜெனரல் லலித் தவுலகல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றி்ல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

2015 ஆம் ஆண்டு பல உறுதிமொழிகளை வழங்கிய பின்னரே இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது.

ஆனாலும், அந்த உறுதிமொழிகளை எந்தவகையிலும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முனையவில்லை. அத்துடன் பொதுமக்கள் மேலும் பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

ஆனாலும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நான்கு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து நிற்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருந்த போதும், அப்போதைய அரசாங்கம் அவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியது.

தற்போதும், வடக்கில் பல பகுதிகளில் விடுதலைப்புலிகளின் உடைகள் ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அவை தொடர்பான எந்தவித தகவல்களும் எங்களுக்கு தெரியாது.

அரசாங்கம் அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்காக இராணுவத்தினரிடம் உள்ள காணிகளை பறித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் 35000 இராணுவத்தினர் இருக்கின்றனர். அவர்கள் வானத்திலா வசிப்பது. இவை பற்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராணுவத்தினர் 22 வருடங்கள் சேவை முடிந்த பின்னர் ஓய்வு பெறுகின்றனர்.

அப்போது, அவர்களுக்கு 45 வயதாகிவிடும். அவர்களின் குடும்ப தேவைகள் அப்போதுதான் கூடுதலாக இருக்கும். ஆனாலும், அந்த காலத்தில் அவர்களின் வேதனம் மூன்றில் இரண்டாக குறைந்திருக்கும்.

இதனைப் புரிந்து கொண்ட கடந்த அரசாங்கம் எவன்காட் போன்ற நிறுவனங்கள் மூலம் 8000 இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கியிருந்தது.

தற்போது அவை இல்லாமல் போய்விட்டது.

இந்தநிலையில், இன்னும் ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இராணுவத்தினரின் கஷ்ட நட்டங்களை அறிந்த ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று நாங்கள் நம்புகிறோம் அவர் குறிப்பிட்டார்.

Ninaivil

திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019