இன்றைய பங்குச்சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 09-07-2018


உலகச் சந்தைகள்

அமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,759.82 (+23.21) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 24,456.48 (+99.74) என்ற அளவிலும் 06-07-18 அன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 04.00 மணி நிலவரப்படி  உலக சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,254.90 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் (செப்டம்பர் 2018) பீப்பாய் ஒன்றுக்கு 77.18 டாலர்  என்ற அளவிலும் இருந்தது.


டாலரின் மதிப்பு ரூபாயில்

06-07-18 அன்று  அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 68.8757 என்ற அளவில் இருந்தது.

நிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்

இன்று நிஃப்டி எப்படி இருக்க வாய்ப்பு?\06-07-18 அன்று நிஃப்டி சிறியதொரு ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. கடந்த ஒரு மாத காலமாகவே நிஃப்டி டெக்னிக்கலாக 10600/10730/10850 என்ற எல்லைகளுக்குள் சிக்கிக்கொண்டதைப்போன்ற தோற்றத்தையே தந்துவருகின்றது. இது போன்ற சூழ்நிலைகளில் செய்திகள் மற்றும் நிகழ்வுகள் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது என்பதால் அவற்றின் மீது மிகுந்த கவனம் வைத்தே இப்போதைக்கு டிரேடிங் செய்யவேண்டியிருக்கும். கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து  சந்தை செட்டிலான பின்னரே வியாபாரம் செய்வது குறித்த முடிவுகளை எடுப்பது நல்லது. டைரக்‌ஷன்லெஸ் நிலைமை வந்தால் வியாபாரம்தனை முழுமையாக தவிருங்கள். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை தவிருங்கள்.  எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.


வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்?

06-07-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை  என்று பார்த்தால் 4,074.74 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 5,042.92 கோடி ரூபாய்  அளவிற்கு விற்றும் நிகர அளவாக 968.18 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர். 

உள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) என்ன செய்தார்கள்?

06-07-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால்  4,003.43 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 2,522.61 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 1,480.82 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர். 

டெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே!

குறிப்பிட்ட சில பங்குகளில் 06-07-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாட்களில் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் (5 நாள் எண்ணிக்கை) மற்றும் பத்து நாட்களில் மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் (10 நாள் மூவிங் ஆவரேஜ் -DMA) டெலிவரியின் வால்யூம் அதிகரித்த விவரம்:.
எப்&ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால் புதிய வியாபாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:

IDBI.

நேற்றைக்கு ஜூலை மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):

SBIN, TATAMTRDVR, NATIONALUM, DISHTV, JISLJALEQS, BPCL, TATAPOWER, L&TFH, IDFC, M&M, CANBK, IOC, NIFTY, HCLTECH, JSWSTEEL, SREINFRA, EXIDEIND, BEL, ALBK.

நேற்றைக்கு ஜூலை மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை  குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):

GAIL, DHFL, INDIACEM, BHARTIARTL, MUTHOOTFIN, INDUSINDBK, INDIGO, CHOLAFIN, HDFCBANK, WIPRO, PIDILTIND, MARUTI, BHARATFIN.

இன்றைய போர்டு மீட்டிங்குகள் 

இன்று  போர்டு மீட்டிங்  நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்)Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018