அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு வகை காட்டு வாழை மரம்

'ஒண்ணு இங்க இருக்கு... இன்னொன்னு எங்க?' - கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் வாழைப்பழ நகைச்சுவையை அனைத்து வயதினரும் ரசிப்பார்கள். சிரிப்பார்கள். ஆனால், இப்போது வாழைப்பழம் குறித்து வரும் தகவல் ரசிக்கும்படி இல்லை. ஆம், அழியும் தருவாயில் உள்ளது ஒரு வகை காட்டு வாழை மரம்.


படத்தின் காப்புரிமை

மடகாஸ்கரில் மட்டுமே உள்ள இந்த வகை வாழைமரம், பெரும்பாலும் அழிந்துவிட்டது. இன்னும் ஐந்து மரங்கள் மட்டுமே காட்டில் மிச்சம் இருப்பதாக கூறுகிறது தரவு ஒன்று.

இந்த வகை வாழை மரத்தை காக்க வேண்டும் என்று சொல்லும் அறிவியலறிஞர்கள், "எதிர்காலத்தில் வாழைப் பழம் என்ற பழ வகை அழிந்துவிடாமல் இருப்பது இந்த வகை வாழை மரத்தை காப்பதில்தான் இருக்கிறது" என்கிறார்கள்.உலகெங்கும் அதிகம் நுகரப்படும் வாழைப்பழமானது கவென்டிஷ் (Cavendish) வகையை சார்ந்தது. இது சுலபமாக பூச்சிகளால் தாக்கப்படும்.

ஆனால் இந்த மடகாஸ்கர் வாழைப்பழமானது அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுலபமாக பூச்சிகளால் தாக்கப்படாது

கிவ்வில் உள்ள ராயல் பொடானிக்கல் கார்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஏலென், இந்த வகை வாழைப்பழத்திற்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நோய் மற்றும் வறட்சியை தாண்டி வளரும் என்கிறார்.

ஏன் இந்த வாழைப்பழ மர வகை காக்கப்பட வேண்டும்?

இந்த வகை வாழைப்பழ மரம் அழிவது ஒட்டுமொத்த வாழைப்பழ இனத்தின் அழிவுக்கு வழிவகை செய்யலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது குறித்து விரிவாக விளக்கும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த ஹெலினா ரலிமனானா, மடகாஸ்கர் தீவின் இயற்கை பாரம்பரியத்திற்கு இந்த வகை வாழை மரமும் ஒரு காரணம் என்கிறார்.

படத்தின் காப்புரிமை
Image caption

அண்மையில், சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் அழிந்து வரும் மரங்களின் பட்டியலில் இந்த வகை வாழை மரத்தையும் சேர்த்து இருக்கிறது

ஹெலினா, "இந்த வகை வாழை மரத்தினை காப்பதன் மூலம், அதன் மரபணுவை கொண்டு பல ஆய்வுகளில் ஈடுபட்டு, நோய் தாக்குதலிலிருந்து பிற வாழை வகைகளையும் காக்க முடியும்" என்கிறார்.ஏன் வாழை சுலபமாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது?

ஒரு சீப்பில் உள்ள ஒரு வாழைப்பழத்தை ஏதேனும் ஒரு பூச்சி தாக்கி நோய் ஏற்பட்டால் அது சுலபமாக பிற பழங்களுக்கும் பரவும். அதனால்தான் வாழைப்பழங்கள் சுலபமாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018