வடக்கில் தனி இராஜ்ஜியம்! – கரும்புலிகள் தினத்தை அனுஷ்டிக்குமளவுக்கு நிலைமை படுமோசமென மகிந்த சீற்றம்

வடக்கு மாகாணமானது தனியானதொரு இராஜ்ஜியமாகவே இயங்கிவருவதாகவும், அங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

மரணமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வீ.கே.இந்திகவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் யாழில் கரும்புலி தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளரொருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு விமர்சித்தார்.

“வடக்கில் எதைச் செய்தாலும் பிரச்சினையில்லை என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது. காரணம், அது தனி இராஜ்ஜியம்போலவே செயற்பட்டுவருகின்றது. தெற்கில் சம்பவங்கள் நடந்ததால்தான் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

வடக்கில் அவ்வாறு சட்டம் கம்பீரமாக செயற்படுவதில்லை. இதனால்தான் கரும்புலிகள் தினத்தைக்கூட அனுஷ்டிக்கும் நிலை உருவாகியுள்ளது” என்றும் மஹிந்த கூறினார்.

அத்துடன், ‘நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான கட்டுரை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்கவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மஹிந்த, “அர்ஜூன் மகேந்திரன் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் வைத்து வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால், மறுதினமேன் நான் அறிவிப்பு விடுப்பேன்” என்றார்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018