திருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து

திருப்பதி கோவிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

 

திருமலை:

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட 4 உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி வரும் ஜூலை 17-ந் தேதி திருமலையில் ஆனிவார ஆஸ்தானம் எனப்படும் புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது.

அதனால் அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையான நாளை 10-ந் தேதி ஏழுமலையான் கோவில் முழுவதும் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.

இதையொட்டி நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவில் சுத்தம் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

திருப்பதியில் எச்.வி.சி. பகுதியில் புதிய முடி காணிக்கை செலுத்துமிடத்தை தேவஸ்தானம் நேற்று திறந்தது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் 4 முடி காணிக்கை செலுத்தும் மையங்களை தேவஸ்தானம் அமைத்துள்ளது.

ஆயினும், பக்தர்கள் வருகை அதிகம் உள்ள நாட்களில் அவர்கள் தங்கள் தலை முடியை காணிக்கையாக செலுத்த வெகு நேரம் காத்திருக்கின்றனர். அவர்களின் சிரமத்தைக் குறைக்க தேவஸ்தானம் கருடாத்திரி நகர் சோதனைச் சாவடி அருகில் உள்ள ஹில்வியூ காட்டேஜ் பகுதியில் நேற்று புதிய முடி காணிக்கை செலுத்தும் மையத்தை திறந்தது


 

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018