திருவள்ளூரில் டேங்கர் லாரி டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தம்


பொன்னேரி:

திருவள்ளூரை அடுத்த மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் உள்ளன.

இங்கிருந்து தினந்தோறும் 500-க்கு மேற்பட்ட டேங்கர் லாரிகளில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் சப்ளை செய்யப்படுகிறது. ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் லாரி வாடகையை உயர்த்தி தர வேண்டும் என்று ஒப்பந்த நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தனர். தற்போது 1 கி.மீட்டருக்கு ரூ.2.11 கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை ரூ.2.70ஆக உயர்த்தி தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இதுபற்றி ஒப்பந்த நிறுவனங்கள் எந்த உத்தரவாதமும் கொடுக்க வில்லை. இதையடுத்து வருகிற 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே லாரி வாடகையை உயர்த்தி தரக்கோரி இன்று காலை திடீரென டேங்கர் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்வது முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அவர்கள் தங்களது லாரிகளை குடோன் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் முன்பு நிறுத்தி வைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதற்காக இன்று பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டால் பெட்ரோல், டீசல் சப்ளையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. போராட்டம் தொடரும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து சென்னை பெட்ரோலியம் டேங்கர் லாரி அசோசியே‌ஷன் தலைவர் வரதராஜ் கூறியதாவது:-

டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம், சுங்க சாவடி கட்டணம், உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றால் டேங்கர் லாரிகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி ஒப்பந்த நிறுவனங்களிடம் தெரிவித்து வாடகையை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே இந்த ஸ்டிரைக் தொடங்கியுள்ளது. லாரி வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டேங்கர் லாரி உரிமையாளர் போராட்டத்தையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் முன்பு டி.எஸ்.பி. ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar