மும்பை நடைபாதை வாசிகளின் பசிப்பிணியை போக்கும் உணவு வங்கி

மும்பை நடைபாதை வாசிகளின் பசிப்பிணியை போக்கும் உணவு வங்கி













மும்பை :

சாலையோரத்தில் ஆதரவின்றி வசிப்போர், மூன்று வேளை உணவு கிடைக்காமல் அல்லல்படுவது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நம்மில் அநேகம் பேர் இந்த அறிதலோடும், அனுதாபப்படுவதோடும் நின்றுவிடுவோம். 

ஆனால், மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி டி.சிவாநந்தன் அனுதாபத்தோடு ஒதுங்கிவிடாமல் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கினால் என்ன... என்ற கண்ணோட்டத்தில் தீவிரமாக சிந்தித்து தொடங்கியதுதான் இந்த உணவு வங்கி.

பிரபல உணவகம் ஒன்றுடன் இணைந்து சிவாநந்தன் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த உணவு வங்கி தற்போது உணவு மீட்பு அமைப்பை போன்று செயல்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள உணவங்கள், உணவு விடுதிகளில் தினந்தோறும் மீதமாகும் உணவுப் பொருட்களை சேகரித்து பசியால் வாடுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் சேவையை குழுவாக செய்து வருகிறார்கள்.

ரொட்டி, அரிசி, சாம்பார் மற்றும் காய்கறி வகைகள் கெட்டுப்போவதை தடுக்கும் விதமாக அவை சேகரிக்கப்பட்ட  60 முதல் 90 நிமிடங்களுக்குள்ளாக நடைபாதை வாசிகளின் பசிப்பிணியை போக்க வழங்கப்பட்டுவிடுகிறது. 

மேலும், மருத்துவமனை மற்றும் குடிசைப்பகுதிகளின் நடைபாதையில் உள்ள உணவு இல்லாதாவர்களுக்கு விரைந்து உணவு வழங்குவதற்காக  ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தப்பட்ட இரண்டு வேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வேலை நாட்களில் 300 முதல் 400 நபர்களுக்கும், விடுமுறை தினத்தன்று 700 முதல் 800 நபர்களுக்கும் இவர்கள் உதவி செய்துவருகிறார்கள். இதுவரை மாநகர் முழுதும் 75 ஆயிரம் பேர் இந்த உணவு வங்கியினால் பயனடைந்துள்ளனர்.



இதுகுறித்து பேசிய சிவாநந்தன், ’ நாட்டில் 20 கோடி ஏழைகள் பட்டினியாக உறங்குகின்றனர், சுமார் 2 லட்சம் கோடி டன் உணவு வீணாகிறது. இதை பற்றி யோசிக்கையில் உணவை வீணடிப்பவர்களுக்கும் உணவு தேவைபடுபவர்களுக்கும் இடையே இணைப்பை உருவாக்கிய சென்னையை சேர்ந்த ’நோ புட் வேஸ்ட்’ திட்டத்தை பார்த்த பின்னர் உணவு வங்கி தொடங்க வேண்டும் எண்ணம் ஏற்பட்டது. 

நாம் வசிக்கும் நகரங்களில் இரண்டு வகையான மக்கள் உள்ளனர். ஒரு தரப்பினர் உணவங்களில் உணவை வீணடிக்கின்றனர். மற்றொரு தரப்பினர் ஒரு வேலை உண்ணவே உணவில்லாமல் காய்ந்த வயிற்றுடன் உறங்க செல்கிறார்கள். இந்த இரண்டு வகையான மக்களுக்கும் இடையே ஒரு பாலத்தை போன்று நாங்கள் செயல்பட்டு வருகிறோம்’ என தெரிவித்தார்.


Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018