2016-ல் 4-வது இடம்; 2018-ல் நம்பர் ஒன்- வரலாற்று சாதனைப்படைத்த தீபா கர்மாகர்

துருக்கியில் நடந்த உலகக் கோப்பை சாலெஞ்சர்ஸ் ஜிம்னாஸ்டிக் தொடரில் தங்கம் வென்று தீபா கர்மாகர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். காயம் காரணமாக இரு ஆண்டுகளாகப் போட்டியில் பங்கேற்காமல் இருந்த தீபா, கலந்துகொண்ட முதல் போட்டியிலேயே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 


மெர்ஸின் நகரில் நடந்த இந்தப் போட்டியில் வால்ட் பிரிவில் 14.150 புள்ளிகள் பெற்று தீபா இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலகக் கோப்பை சேலஞ்சர்ஸ் தொடரில் தங்கம் வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் தீபா படைத்துள்ளார். 

2016-ம் ஆண்டு பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் தீபா கர்மாகர்' புரோடுனுவா 'ஜிம்னாஸ்டிக்கில் 4-வது இடத்தைப் பிடித்தார். ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இந்தியப் பெண் ஒருவர் இத்தகையை உயரத்தை எட்டியதும் உலகமே திரும்பிப் பார்த்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பயிற்சியின்போது அவருக்கு முழங்கால் பகுதியில் தசைநார் கிழிந்து (anterior cruciate ligament) காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நீண்ட நாள்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தீபா பங்கேற்கவில்லை.


``தங்கம் வென்றதைவிட என் ஃபிட்னெஸ் இப்போது எனக்கு திருப்தி அளிக்கிறது. ஆசியப் போட்டிக்குச் செல்ல முழு அளவில் தயாராக உள்ளேன். `பீம்' பிரிவில் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. கடந்த மார்ச் மாதத்தில்தான் பீம் பிரிவில் பயிற்சி மேற்கொண்டேன். இருப்பினும் திருப்தி. என் வெற்றிக்குப் பின்புலத்தில் இருந்தவர்களுக்கும் பயிற்சியாளர் பிஸேஷ்வர் நந்திக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தீபா கூறியுள்ளார். 

வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஜகர்த்தாவில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிக்கான ஜிம்னாஸ்டிக் இந்தியக் குழுவில் தீபா இடம் பிடித்துள்ளார்.



Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018