ஐசிசி., டி-20 ரேங்கிங்: ஜெட் வேகத்தில் முன்னேறிய கே.எல்.ராகுல்: ‘நம்பர்-1’ இடத்தை பிடித்த பின்ச்!

சர்வதேச டி-20 தொடரை தரவரிசையில் இந்திய வீரர் கே.எல். ராகுல் ஜெட் வேகத்தில் முன்னேறினார். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறினார். 

சர்வதேச டி-20 அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசைப்பட்டியல்) ஐ.சி.சி., சமீபத்தில் வெளியிட்டது. இதில் நேற்று முடிவுக்கு வந்த இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என இழந்தது. 

இந்தியா ‘நம்பர்-2’: 

இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இடத்தை (124) தக்க வைத்துக்கொண்டது. ஆஸ்திரேலியா (122), இங்கிலாந்து (117), நியூசிலாந்து (120) அடுத்த மூன்று இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் அணி (132) தொடர்ந்து ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறது. இதே போல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் (812) மூன்றாவது இடம் பிடித்தார்.

ஆஸ்திரேலியாவின் பின்ச் (891) நம்பர்-1 இடத்துக்கு முன்னேறினார். பாகிஸ்தானி பஹார் ஜமான் (842) இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இந்திய கேப்டன் விராட் கோலி (671) 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா (678) 11வது இடம் பிடித்தார். கெட்டியாக பிடித்த சகால்: 

சிறந்த பவுலர்களுக்காக பட்டியலில் இந்திய வீரர் சகால் (685) தனது நான்காவது இடத்தை தக்க வைத்துக்கொண்டார். ஆப்கானிஸ்தானின் ரசித் கான் (813) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தானின் சதாப் கான் (723) இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்தின் இஷ் சோதி (700) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

மேக்ஸ்வெல் மிரட்டல்: 

இதே போல சிறந்த ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (366) நம்பர்-1 இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் முகமது நபி (321), வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (279) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018