வடக்கில் அமை­தி­யான சூழலை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் தவ­று­கி­றது:பாது­காப்பு மோச­மா­கி­யுள்­ளது

விஜ­ய­கலா மகேஸ்­வரன் எம்.பி.யின் கருத்து தவ­றா­ன­தென்­பது எமக்கும் தெரியும், ஆனால் அவ­ரது கருத்தை வைத்­துக்­கொண்டு அர­சியல் செய்­யாது வடக்கின் இன்­றைய நிலை­மை­யையும் அனை­வரும் சிந்­திக்க வேண்டும் எனஅமைச்சர் கலா­நிதி சரத் அமு­னு­கம தெரி­வித்தார்.

வடக்கில் தமிழ் மக்­க­ளுக்­கான அமை­ தி­யான சூழலை உரு­வாக்கிக் கொடுக்க அர­சாங்கம் தவறி வரு­கின்­றது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.  

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் முன்­வைத்த கருத்­துக்கள் குறித்து பல்­வேறு அர­சியல் விமர்­ச­னங்கள் எழுந்­துள்ள நிலையில் அது குறித்து கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் இது குறித்து மேலும் கூறு­கையில்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் கூறிய கார­ணிகள் விடு­தலைப் புலி­களை ஆத­ரித்து அவர் பேசிய விட­யங்கள் தவ­றா­ன­லை­யாகும். அதனை நாம் அனை­வரும் கண்­டிக்­கின்றோம். அர­சாங்­கத்­தினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட ஒரு இயக்கம் மற்றும் , இலங்­கையில் தடை செய்­யப்­பட்ட ஒரு அமைப்பின் தலைவர் பற்றி அரச நிகழ்வில் பேசு­வது என்­பது ஜன­நா­யக விரோத செயல் என இன்று பலர் கூறி வரு­கின்­றனர்.

. ஆனால் இன்று வடக்கின் நிலைமை பற்றி எவரும் வாய் திறக்­காது உள்­ளது ஏன். இன்று வடக்கில் இடம்­பெறும் சட்ட விரோத செயற்­பா­டுகள், போதைப்­பொருள் பாவனை, கொலை, கொள்ளை, கற்­ப­ழிப்பு குற்­றங்கள் என்­பன அங்கு மக்­களின் அன்­றாட வாழ்­கையை பெரிதும் பாதித்­துள்­ளன.

இது குறித்து அர­சாங்­க­மாக நாம் அக்­கறை செலுத்த தவறி வரு­கின்றோம். மக்­களின் நிலை­மை­களை கருத்தில் கொண்டு அவர்­க­ளுக்­கான சுதந்­தி­ரத்­தையும் அமை­தி­யான சூழ­லையும் ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும்.

இன்று வடக்கு மக்­களே தமக்­கான பாது­காப்பை கேட்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே நாட்டின் பாது­காப்பு பிரி­வினர் தமது சரி­யான நட­வ­டிக்­கை­களை கையாள வேண்­டி­யுள்­ளது. ஆகவே வெறு­மனே ஒரு­வ­ரது கருத்தை வைத்­து­கொண்டு அதன் மூல­மாக அர­சியல் வாய்ப்­பு­களை தேட பலர் முயற்­சித்து வரு­கின்­றனர். ஆனால் வடக்கின் உண்­மை­யான நிலை­மை­யையும் கவ­னத்தில் கொண்டு செயற்­பட வேண்டும்.

விஜ­ய­கலா எம்.பியின் செயற்­பா­டுகள் குறித்து சபா­நா­யகர் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாக கூறி­யுள்ளார். கட்சி சார்­பிலும் நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தாக அவர்கள் கூறி­யுள்­ளனர்.

அவை சரி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் என நம்­பு­கின்றோம். எனினும் இதனை வைத்­து­கொண்டு மீண்டும் நாட்­டுக்கு பேரா­பத்து வரும் என்ற கருத்­துக்­களை முன்­வைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. நாட்டில் புலிகள் இல்லை, வடக்கில் பயங்­க­ர­வாதம் உரு­வாகும் சூழலும் இல்லை.

மக்கள் ஜன­நா­யக ரீதியில் சிந்­திக்­கின்­றனர். அவர்­களை குழப்­பியும் சிங்­கள மக்கள் மத்­தியில் தவ­றான எண்­ணப்­பாட்டை உரு­வாக்­கியும் நாட்டில் மீண்டும் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது.

இன்று நாட்டின் நிலைமை மிகவும் மோச­மா­ன­தாக உள்­ளது. பொரு­ளா­தார ரீதியில் பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்றோம். வாழ்­வா­தார சிக்­கல்கள் உள்­ளன. விவ­சாயம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. தேசிய உற்­பத்­தி­களில் வீழ்ச்­சியை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. அவற்றை வெற்­றி­கொள்ள வேண்டும் என்றால் அனை­வரும் இணைந்து இந்த சாவால்­களை வெற்றிகொள்ள வேண்டும் .

தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என்ற பாகுபாடுகளை மறந்து நாம் அனைவரும் இணைந்து நாட்டினை வெற்றிகொள்ள வேண்டும். இதில் எந்த தரப்பினராக இருந்தாலும் அவர்கள் தமது சுயநல அரசியலை கைவிட்டு மக்களுக்காக சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018