கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட இளம் அரசியல் தலைவர் தொடர்பான ரிப்போர்ட்


கொழும்பு அரசியலில் வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதியாக திகழ்ந்த நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ்.கே.கிருஷ்ணாவின் கொலையில் அரசியல் பின்னணிகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.கிருஷ்ணா செட்டித்தெருவில் உள்ள அவரது அலுவலகத்திற்கு எதிரில் இன்று காலை 7.20 அளவில் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

39 வயதான கிருஷ்ணா சமூக சேவையில் ஈடுபட்டு வந்ததுடன் கொழும்பு, வடக்கில் தமிழர்கள் உட்பட அனைத்து இன மக்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்று வந்தார்.

இவருக்கு இருந்து வரும் மக்கள் ஆதரவு காரணமாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேரதலில் சுயேட்சையாக போட்டியிட்டு கொழும்பு மாநகரசபைக்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கிருஷ்ணா என்ற இந்த இளம் அரசியல் தலைவரின் அசுர வளர்ச்சியானது ஏனைய சிறுபான்மை கட்சிகளுக்கு சவலாக இருந்து வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் கூறுகின்றனர்.

மக்களுடன் சர்வசாதாரணமாக நெருங்கி பழகி வரும் கிருஷ்ணா சுட்டுக்கொல்லப்பட்டமை பிரதேச மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு அரசியல் விரோதம் காரணமாக இருக்கலாம் என அவருக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளில் கொலைக்கான காரணங்கள் வெளியாகலாம்.

எது எப்படி இருந்த போதிலும் இலங்கையில் தற்போது பரவலாக கொலைகள், கொள்ளைகள் என குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும் தமது புள்ளிவிபரங்களின் அடிப்படையில், கடந்த வருடங்களுடன் குற்றச் செயல்கள் அதிகரிக்கவில்லை என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும் ஆங்காங்கே கொலை சம்பவங்கள் நடந்து வருவதையே காணமுடிகிறது. கொழும்பின் மையபகுதியான கொட்டாஞ்சேனை, ஜெம்பட்டா வீதியில் நேற்று இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனை தவிர வடக்கு பகுதிகளில் வாள் வெட்டுக்குழுக்களின் வன்முறைகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. மறுபுறம் நாட்டில் போதைப்பொருள் பாவனைகளால், பாலியல் வல்லுறவு சம்பவங்களும், கொலைகளும் அரங்கேறி வருவதும் நாட்டின் எதிர்கால சந்ததிகளின் வாழ்வியல் தொடர்பாகவும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளன.

நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த போர் முடிவுக்கு வந்து 9 ஆண்டுகள் கடந்துள்ளது. போரின் காயங்கள் இன்னும் குணமடையாத சூழ்நிலையில், பாதாள உலகக்குழுவினர் உட்பட ஆயுத குழுக்களின் வன்முறைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

மக்களின் இந்த அச்சத்தை போக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையும் பொறுப்புமாகும். சம்பந்தப்பட்டவர்கள் தமது கடமைகளை சரியாக செய்ய தவறினால், நாடு வன்முறைகளால் சீரழிந்து போவதை எவராலும் தடுக்க முடியாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018