மகேஸ்வரன் குடும்பத்திற்கு புலிகள் இன்றி கஷ்டம்..நஷ்டம்....

வடக்கில் நடைபெறும் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் கருத்து வௌியிட்டிருந்தார். விஜயகலா தான் அவ்வாறு கருத்து வௌியிட்டதை ஏற்றுக் கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அக்கிலவிராஜ் காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார். ஆவேசத்தில் தனது வாயில் இருந்து அவ்வாறு வார்த்தை வந்துவிட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

 

விடுதலைப் புலிகள் காலத்தில் அவ்வாறு குற்றங்கள் இடம்பெறவில்லை என்றும் யுத்தம் முடிந்தபின் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் விஜயகலா குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகத்தை நிறுத்த புதைக்கப்பட்ட புலிகள் மீள வரவேண்டும் எனக்கூறும் விஜயலாதான் வித்தியாவை துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபர்களை பலாத்காரமாக காப்பாற்றி அழைத்துச் சென்றார் என்பதை அனைவரும் அறிவர்.


 

 

2015 மே மாதத்தில் யாழ், புதுக்குடியிருப்பு பகுதியில் வித்தியா என்ற பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரான மகாலிங்கம் சசிகுமார் என்ற சுவிஸ் குமார், தன்னை காப்பாற்ற விஜயகலா உதவி செய்ததாக யாழ் மேல் நீதிமன்றில் ஒப்புக் கொண்டார். பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட சுவிஸ் குமார் என்பவரை விஜயகலா சம்பவ இடத்திற்கு சென்று காப்பாற்றிச் சென்றார்.


 

 

பேராசிரியர் தமிழ்மாறம் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க ஆகியோர் சுவிஸ் குமாரை காப்பாற்றியது மாத்திரமன்றி அவரை கொழும்புக்கு அழைத்துவரவும் நடவடிக்கை எடுத்தத்துடன் இதற்கு விஜயகலா முழு ஒத்துழைப்பு வழங்கியதுடன் பிரதமர் ரணிலின் பெயரையும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட விஜயகலா வடக்கில் குற்றங்கள் இடம்பெறுவதாக நீழிக்கண்ணீர் வடிப்பது கேலிக்கூத்தாகும்.

 

 

மேலும் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் ஆட்களை கடத்திச்செல்ல முழு மூச்சுடன் செயற்பட்டது விஜயகலா மகேஸ்வரனும் தியாகராஜா மகேஸ்வரனும் என்பது வௌிச்சத்திற்கு வந்த உண்மை. ஆட்கடத்தல் வலயமட்ட பிரச்சினையாக உருவெடுத்ததுடன் இலங்கை – அவுஸ்திரேலிய உறவையும் பாதித்தது.

 

ஆட்கடத்தலுக்கு பல லட்சம் ரூபாய்களை இவர்கள் வாங்கியது மாத்திரமன்றி யுத்த காலத்தில் வடக்கிற்கு பொருட்களை கொண்டுசென்று துன்பப்பட்ட மக்களிடம் பல மடங்கு அதிக விலையில் விற்று தமிழ் மக்களை சூரையாடிய குடும்பமே இந்த மகேஸ்வரன் குடும்பம். துன்பப்பட்ட மக்கள் இன்றும் வௌிநாட்டில் கண்ணீர்வடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் பணத்தை சூரையாடிய விஜயகலா, துவாரகேஸ்வரன் போன்றவர்கள் இன்பத்தை அனுபவித்துக் கொண்டு மீள புலிகள் அமைப்பு உருவாக வேண்டும் என கனவு காண்கின்றனர்.

 

வடக்கில் வியாபாரிகளை ஊடகம் ஊடாக அச்சுறுத்தி கப்பம் பெறும் துவாரகேஸ்வரன் அதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை பயன்படுத்துகின்றார். கொழும்பு – யாழ் பஸ் சேவையிலும் விஜயகலா, துவாரகேஸ்வரன் ஆகியோர் மக்களை ஏமாற்றி பணம் உழைக்கின்றனர். முன்னர் புலிகள் இருந்த காலத்தில் அவர்களின் பெயரால் தமிழ் மக்களை ஏமாற்றி பணம் சூரையாடிய இவர்கள் இன்று பணம் சூரையாட வழியின்றி பித்துப்பிடித்து திரிகின்றனர். இவர்களின் இன்றைய தேவை பணம் உழைப்பதற்கு யுத்தம் அதற்கு தமிழிழ விடுதலைப் புலிகள் தேவையே அன்றி வேறெந்த மக்கள் நலனும் கிடையாது.Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018