கல்முனை எவரெடி விளையாட்டுக்கழகம் வெற்றி

துறைநீலாவணை சிவசக்தி சம்பியன் கிண்ணத்தை கல்முனை எவரெடி விளையாட்டுக்கழகம் தட்டிக்கொண்டது.

துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக்கழகத்தின் 11ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மென்பந்து கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை கடந்த மூன்று வாரங்களாக துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தியிருந்தது.

இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த 37விளையாட்டுக் கழகங்களின் கிரிக்கெட் அணியினர் பங்கு பற்றினார்கள்.

இதன்போது இறுதிப்போட்டிக்கு கல்முனை எவரெடி விளையாட்டுக் கழகமும், ஆரையம்பதி விஸ்வகலா விளையாட்டுக் கழகமும் தெரிவாகியுள்ளது.அணிக்கு 8ஓவர் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியே இவ்வாறு நடைபெற்றது.

இந்த இறுதிப்போட்டியானது ஞாயிற்றுக்கிழமை (8) பிற்பகல் 2.00 மணியளவில் துறைநீலாவணை பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோது நாணச்சுழற்ச்சியில் வெற்றிபெற்ற கல்முனை எவரெடி கிரிக்கெட் அணியினர் துடுப்பெடுத்தாடி சகல ஓவர்களையும் நிறைவு செய்து 51 ஓட்டங்களை குவித்தார்கள்.

52 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆரையம்பதி விஸ்வகலா கிரிக்கெட் அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்கள்.இந்த சுற்றுப்போட்டியில் கல்முனை எவரெடி விளையாட்டுகழகத்தினர் நடுவர்களால் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணியினராக தெரிவு செய்யப்பட்டார்கள்.

இந்தப்போட்டியின் பரிசளிப்பு விழா துறைநீலாவணை பொதுவிளையாட்டு மைதானத்தில் சிவசக்தி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும்,பல்கலைக்கழக மாணவனுமான க.துஸ்யந்தன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் அதிதிகளாக ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம், இலங்கை இன்சுரன்ஸ் நிறுவனத்தின் விற்பனை ஆலோசகர் ரீ.சிவராஜன்,வர்த்தகர்களான கந்தமுத்து -சங்கீத்,சிவராசா-தேவப்பிரியன் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதலாவது சம்பியன் கிண்ணத்தை கல்முனை எவரெடி விளையாட்டுக் கழகமும், இரண்டாவது சம்பியன் கிண்ணத்தை ஆரையம்பதி விஸ்வகலா விளையாட்டுக் கழகத்திற்கும் வழங்கியதோடு, ஆட்டநாயகனாக எஸ்.றுசிகரனும்,தொடராட்ட நாயகனாக கே.நிலக்ஷனும் தெரிவுசெய்யப்பட்டு கிண்ணங்களும் வங்கப்பட்டது.இவர்களுக்கு 13000,7000 பணப்பரிசுகளும் மேலதிகமாக வழங்கப்பட்டது.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018