ஹன்சிகாவுடன் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தற்போது நடிக்க இருக்கும் நாயகிக்கு முக்கியத்தும் உள்ள படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார்.

ஹன்சிகா தற்போது நாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் கூறும்போது, ‘ஜிப்ரான் சார் ஏற்கனவே மிகப்பெரிய படங்களில் இசையமைப்பாளராக இருப்பதால், என் படத்துக்கு இசையமைப்பாரா? என்று சந்தேகித்தேன்.

பாடல்களை விட, படத்தின் பின்னணி இசை ஸ்கிரிப்டுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளார். என் கதை அவருக்கு பிடித்து போனது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் பணிபுரியும் சிறந்த அனுபவத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

ஹன்சிகாவின் நேர்த்தி, வலுவான ஸ்கிரிப்ட் மற்றும் ஜிப்ரானின் பொக்கிஷமான இசை - நிச்சயமாக இந்த அணிக்கான ஒரு வினோதமான தருணம். ஜியோஸ்டார் எண்டர்பிரைஸ் தயாரிப்பாளர் எம்.கோடீஸ்வர ராஜு மற்றும் நிர்வாக இயக்குனர் விஜய் ராஜேந்திர வர்மா இந்த படத்திற்காக சில முக்கிய தொழில் நுட்ப வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

'நாயகி மையப்படுத்திய படம்' என்றவுடனேயே, ​​படத்தில் வணிக மதிப்புகள் அவ்வளவாக இருக்காது என்று கருதலாம். ஆனால் தயாரிப்பாளர்கள் உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுக்க சிறந்த கூறுகளை சேர்த்து வருகிறார்கள்.

முன்னதாக மசாலா படம், ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார் யூ.ஆர்.ஜமீல். ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் ஜமீல் செய்த வேலையால் ஈர்க்கப்பட்டார் ஹன்சிகா. இந்த படத்தின் கதையை கேட்டதும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018