தென்னாபிரிக்க தொடரில் சந்திமால் விளையாட முடியுமா? : ஐசிசியின் தீர்ப்பு இன்று!

ஐசிசியின் விதிமுறைக்கு மாறாக செயற்பட்ட குற்றத்திற்காக இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு எதிராக இன்று விசாரணை இடம்பெறுவதுடன், தண்டனை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயத்தினை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

மே.தீவுகளுக்கு எதிராக சென்.லூசியா மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது, சுமார் இரண்டு மணிநேரம் விளையாட மறுத்ததன் காரணமாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

விளையாட்டின் தன்மையை சீர்குழைக்கும் வகையில் நடந்துக்கொண்ட இவர்களுக்கு ஐசிசி விதிமுறைப்படி மூன்றாம் நிலை குற்றம் பதிவுசெய்யப்பட்டுள்ளது

இதுதொடர்பில் விசாரணை செய்ய நீதித்துறை ஆணையராக மைக்கல் பெலோப்பை ஐசிசி நியமித்துள்ளது.

ஐசிசியின் மூன்றாம் நிலை குற்றத்தின் அடிப்படையில், ஒருவருக்கு 4 தொடக்கம் 8 குற்றப்புள்ளிகள் வழங்கப்படும். இவ்வாறு மூன்றாம் நிலை குற்றத்துக்காக 4 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க முடியும்.

இதன்படி சந்திமாலுக்கு தடை விதிக்கப்படுமாயின், தென்னாபிரிக்க அணிக்கெதிராக நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் சந்திமால் நீக்கப்படுவார். ஏற்கனவே தென்னாபிரிக்க அணிக்கதெிரான தொடரின் தலைவராக சந்திமால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நீக்கப்பட்டால் அணியின் தலைவராக சுராங்க லக்மால் நியமிக்கப்படுவார்.

தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக ஏற்கனவே மே.தீவுகளுக்கு எதிரான ஒருபோட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018