முதுகெலும்பு இல்லாத லோக் ஆயுக்தா சட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் கண்டனம்.

முதல்வர், சபாநாயகர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் சேர்ந்து இந்த அமைப்பின் தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பார்கள் என்பதே முதல் கோணலாகத் தெரிகிறது. பொதுவாகவே, தி.மு.க, அ.தி,மு,க, என்று எந்த ஆட்சியிலும் சபாநாயகர் என்பவர் தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் அமைச்சரின் எடுபிடியாகத் தான் செயல்பட்டு வருகிறார். அடுத்து, தமிழ‌கத்தில் எதிர்கட்சித் தலைவர் என்பவர் முதல் அமைச்சர் கூட்டும் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை.

இத்தகைய சூழ்நிலையில், ஆளும் கட்சியின் கைப்பாவையாக ஒருவரை நிய‌மிக்கத்தான் வாய்ப்புள்ளது. அப்படி ஆளும் கட்சியால் நியமிக்கப்படும் ஒருவர் எங்கே சுதந்திரமாகச் செயல்படப் போகிறார்.அடுத்து லோக் ஆயுக்தா தலைவர்/உறுப்பினர் ஆக முடியும் என்றால், பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி , ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி (அல்லது) ஊழல் தடுப்பு/பொது நிர்வாகத்தில் 25 ஆண்டு அனுபவம் கொண்ட நபர் எனச் சட்டம் கூறுகிறது.

பொதுவாகவே நீதிபதிகளிலும் கருப்பு ஆடுகள் உண்டு அதற்கும் மேலாக, பொது நிர்வாகத்தில் 25 ஆண்டு அனுபவம் கொண்ட நபர் என்னும் போதே நிர்வாக அதிகாரிகளுக்குத் தான் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இத்தகையவர்கள் எங்கே இந்நாள் முதல்வரையோ அமைச்சர்களையோ பெரிய அதிகாரிகளையோ விசாரிக்கப் போகிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புக்கள் தான் தமிழகத்தில் இன்றைக்கு மிகப்பெரிய ஊழலின் ஊற்று கண்ணாகத் திகழ்கிறார்கள். ஆனால், உள்ளாட்சி அமைப்புக்களுக்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது சட்டத்தை முனை மழுங்கச் செய்யும் செயல். இது லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்களை நீக்குவதற்கு 45 சட்ட மன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனு வழியாக விசாரணையைத் துவங்கலாமென்பது அவர்களை அச்சத்திலேயே வைத்திருக்கும் நிலை தான் ஏற்படும். எதோ உச்ச நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பயந்து பேருக்கு ஒரு அமைப்பை ஏற்படுத்தியது போலத் தான் உள்ளது. இத்தகைய லோக் ஆயுக்தா முதுகெலும்பு இல்லாத ஒன்றாகத் தான் இருந்திடும்.

ஆனால், குறைந்தபட்சம் ஒரு அமைப்பை ஏற்படுத்தியது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருப்பினும், வீரியம் இல்லாத லோக் ஆயுக்தா இருப்பதும் இல்லாததும் ஒன்று தான். எனவே, லோக் ஆயுக்தா தன்னிச்சையாக அதிகாரத்தோடு செயல்படக் கூடிய ஒன்றாக இருப்பதற்குரிய திருத்தங்களைத் தமிழகச் செய்திட முன்வரவேண்டுமெனத் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Ninaivil

திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
நுவரெலியா
நெதர்லாந்து
22 யூலை 2018
Pub.Date: July 23, 2018
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018