நாட்டின் நீதி எங்கே? கேட்கிறது கூட்டு எதிரணி

விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்ற கருத்துக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுமாயின், இந்நாட்டின் நீதி எங்கே என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

“வடக்கின் அட்டூழியங்களை ஒழிக்க மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என விஜயகலா பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார். இவர் கூறியதை போன்று வேறு எவரும் பேசியிருந்தால் இந்நேரத்திற்கு அவரும் அவரது மொத்த குடும்பமும் சிறைக்கு சென்றிருக்கும்.

ஆனால், விஜயகலாவிற்கு அவரது பிள்ளைகளுடன் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி.

அதுமாத்திரமின்றி, விஜயகலாவின் பேச்சு, அவரை தமிழ் பேசும் மக்களின் தலைவியாக்கியுள்ளது. இவ்வாறான வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இவை விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு உந்துதலாக அமைந்துள்ளன. ஆனால், இவை குறித்து நடவடிக்கை எடுப்பதாக இல்லை.

இந்த நாட்டிலிருந்த நீதி எங்கே, பொலிஸார் எங்கே, இரகசிய பொலிஸ் பிரிவினர் எங்கே” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018