டுவிட்டரில் பின்தொடர்பவர்களில் டிரம்ப் முதலிடம் - மோடிக்கு மூன்றாம் இடம்

உலக நாடுகளில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். நாட்டு நடப்புகள் மற்றும் தன்னை பாதித்த விஷயங்கள் குறித்த தனது கருத்துக்களை அதில் பதிவிட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்கள் பற்றி சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கடந்த 12 மாத இடைவெளியில் நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளின் விவரம் வருமாறு:

 வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

டொனால்ட் டிரம்ப்பை டுவிட்டரில் 5.2 கோடிக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கின்றனர். இவருக்கு அடுத்தபடியாக, இந்த பட்டியலில் 4.75 கோடிக்கும் அதிகமான நபருடன் போப் பிரான்சிஸ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவரை சுமார் 4.3 கோடி நபர்கள் பின்தொடர்கின்றனர்.

முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஜோர்டான் நாட்டு ராணி ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

வெளியுறவு துறை மந்திரிகளிலேயே மிக அதிகமாக பின்தொடர்பவர்கள் பட்டியலில் சுஷ்மா சுவராஜ் முன்ன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018